பொய்க் குற்றச்சாட்டுகள்

1980 ஆம் ஆண்டளவில் பருத்தித்துறையில் கமலம் என்கிற பாடசாலை மாணவி அவரின் ஒன்றுவிட்ட அண்ண்ன் துணையுடன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் ஆனைவிழுந்தான் மணற்காட்டில் புதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஆனால் அவர்களை காப்பாற்ற பணமும் சட்டமும் பலமாக துணை நின்றன.அந்த பெண் பிள்ளையை நடத்தை கெட்டவளாக காட்ட பல பல்கலைக் கழக மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு சாட்சிகளாக ஆஜரானார்கள் .பல கமலம் தன் காதலி என்று சாட்சியம் அளித்தனர்.

அன்றைய நாட்களில் பத்திரிகைகளும் அந்த சாட்சியங்களை மனச்சாட்சியின்றி பிரசுரித்தன.படிக்கும் எங்களுக்கு விளங்கியது அவர்கள் எல்லோரும் பொய்ச் சாட்சிகள் என்று.ஆனால் ஆதாரங்கள் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் என தெளிவு படுத்தின.

அவரகளைச் காப்பாற்ற நினைத்த சட்டம் தீர்ப்பின் முடிவை ஜூரிகளிடம் விட்டுவிட்டது.அத்தனை ஜூரிகளும் குற்றவாளிகளை விடுவிக்க பரிந்துரைத்தனர்.

இந்த ஜூரிகள் அனைவரும் காங்கேசந்துறை சீமந்து ஆலையில் பணிபுரிபவர்கள் என தகவல்கள் கூறின.

இப்படியான பல மனிதர்களே குற்றங்களின் துணைவர்களாகின்றனர்.இங்கே குற்றவாளிகள் மட்டுமல்ல சகலரும் குற்றவாளிகளே.அந்த பிள்ளையை இழந்த பெற்றோரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.

பின்னாட்களில் புலிகள் தமக்கு விளம்பரம் தேடுவதற்காக பிரதான குற்றவாளியை தப்பி ஓடவிட்டுஅந்தப் பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரனை மட்டும் கொலைசெய்தார்கள்.

இன்று கனடா ஒன்ராரியோவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தெய்வா மோகன் ஆரம்ப காலங்களில் அகதிகள் சம்பந்தமான வழக்குகளை நடத்திக்கொண்டிருந்தார்.கிட்டுவின் நண்பரான ரகீம் கனகரத்தினத்தை தனது அலுவலகத்தின் உதவியாளராக வைத்திருந்தார்.இது அவர் தம்மை ஒரு புலி ஆதரவாளராக அடையாளம் காட்டவும் வாடிக்கையாளரை தம்பக்கம் ஈர்க்கவும் அவர் கையாண்ட தந்திரம்.

ரகீம் ஒரு பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கிட்டுவின வலது கரமாக செயற்பட்டவர்..பல்வேறு குற்றச்சாட்டுகளுப் பொறுப்பானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.எனவே அவரை தன் வாடிக்கையாளர் என்ற வகையில் அவருக்கு உதவுவது தவறில்லை.சட்டம் அவரை குற்றவாளி இல்லை என்றும் சொல்லலாம்.நீதிக்கு மனச்சாட்சியும் அவசியம்.இல்லாவிட்டால் பகுத்தறிய முடியாது.

அவரையே உதவியாளாக வைத்திருந்தார்.இவர் நீதிபதியாக எப்படி தன் கடமையை நேர்மையாக செய்வார்.தமிழராக நாங்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது.

(விச ஊசி,கற்பழிப்பு விவகாரங்கள் எழுந்துள்ளது நிலையில் இவை என் நினைவுக்கு வந்தன்)

(விஜய பாஸ்கரன்)