மண் மீட்பு……?

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பச்சிலைப்பள்ளி பகுதியில் உள்ள இயக்கச்சி, வண்ணாங்குளம், நிச்சியவெட்டை, மண்டலாய், சுண்டிக் குளம் போன்ற ஏற்கனவே தாழ்ந்த பகுதிகளாக இருக்கும் பிரதேசங்களில் அதிகம் நடைபெறுகின்றன. இது யாழ் குடாநாட்டையும் கிளிநொச்சி மாவட்டத்தையும் பிரிக்கும் ஆனையிறவு கடல் நீரேரியிற்கு வடக்காக அமைந்த யாழ்ப்பாண பகுதியின் சமுத்திரத்தை அண்டிய பிரதேசம் ஆகும்.

இந்த மணல் வறுகல் தலை தெறிக்க நடைபெறுகின்றது இரவு பகலாக. கிடைத்தவரை இலாபம் என்ற போக்கில். இது யாழ்ப்பாணம் குடாநாடு என்ற நிலையில் இருந்து நிரந்தரமாக தீவாக மாறும் செயற்பாட்டிற்கு வித்திடும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வாக உருவாகியிருக்கின்றது. இச்செயற்பாடு எந்தவகையிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்தது அல்ல.
மேலும் கூடவே பச்சிலைப் பகுதி கடல் நீர் உள் புகுவதினால் உவர் பிரதேசமாக மாறும் அபாயத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த டிப்பர்களின் வரலாற்றை பார்த்தால் புலிகளின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் விசுவாசியாக தம்மை காட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள். 2009 மே 18 இன் மறுதினமே இலங்கை அரசின் விசுவாசியாக மாறியவர்கள். எவ்வாறு 2009 மே மாதத்திற்கு முன்பு தமிழ் பிரதேசங்கள் எங்கும் அபிருத்தி திட்டங்களின் கொத்ராத்துகளை இவர்களே கையகப்படுத்தி செயற்பட்டார்களோ அதே போல் 2009 மே 18 இற்கு பின்பு அப்படியே 180 டிக்கிரியில் திரும்பி வடக்கின் வசந்தத்தின் கொத்தராத்துகளாக மாறியவர்கள். தொடர்ந்து வட மாகாணம் தமிழரின் ஆட்சிக் காலத்திலும் இவர்களே வடக்கில் கோலோட்சி வருகின்றனர். இவர்களுக்கு எல்லாவகையிலும் அனுசரணையாக உள்ள சில அரசு உத்தியோகஸ்தர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர்.

அரசு கட்டுபாடற்ற அள்ளலுக்கு அனுமதித்தாலும் அதிகாரிகளும் இந்த டிப்பர்களும் எமது மண்ணை மீட்போம் என்று அன்று குரல்கொடுத்து தமது வாழ்வை ஓட்டியவர்கள் இன்று எம் மண்ணை கடலுக்கு இரையாக்கி வருகின்றனர். இவர்கள் எக்காலத்திலும் இலாபம் ஒன்றையே தமது இலக்காக கொண்டு செயற்படுபவர்கள்.

எனவே பொது மக்களே எமது நிலத்தை கடலுக்கு இரையாக்கும் இந்த கட்டுபாடற்ற மணல் அகழ்வை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். அன்றேல் யாழ்ப்பாணம் தனித் தீவாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது. முதற்படியாக பச்சிலைபள்ளி பிரதேசம் உவர்க் காடாக மாறும். பின்பு கடல் நீர் தரையினுள் உள்புகுந்து நிலத்தை விழுங்கிவிடும். இதன் பின்பு யாழ்ப்பாணம் தீவு ஆவதை யாரும் தடுக்க முடியாது. சமுத்திரத்தின் கோரத்திற்கு யாரும் தடை போட முடியாது.

இதனை சம்மந்தப்பட்ட (தமிழ்)அமைச்சர்கள் கருத்தில் எடுத்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம். பொது மக்களும் அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு வகை மண் மீட்புதான். மண் காப்புதான்.

(இதில் குறிப்பிட்டுள்ள விடயம் ஒரு குறியீட்டுச் தகவல்தான். இது போன்ற சூழலுக்கு பாதிப்பான விடயங்கள் தமிழ் பிரதேசங்கள் எங்கும்( ஏன் உலகெங்கும்) நடைபெறுகின்றனர். மண் அள்ளுதல் பிளாஸ்ரிக் பொருட்களை கடலுக்குள் வீசுதல் குப்பை கூழங்களை கண்ட கண்ட இடங்களில் போடுதல் மரங்களை வகை தொகையின்றி தறித்தல் அதிக நெருக்கமாக சீமெந்து கட்டங்களை அமைத்தல் குழாய் கிணறுகளை வரையறையின் அடித்தல்….. இத்தியாதி இத்தியாதி)