மூடு திரையும் கொரோனாவும்

பெரும்பாலும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களது வாழ் நிலை இதுதான்.

நான் வேலை செய்யும் இடம் திறந்துதான் இருக்கிறது நான் விரும்பினால் வேலைக்குப் போகலாம் ஆனால் என் குடும்பம் வாழ்வு என சிந்திக்கும் போது வேலையை விட வாழ்தல் முக்கியம் .நம் கஸ்ரங்கள் போதாமைகள் நம்மோடு.

ஊரில் வாழ்ந்த போது எத்தனை ஊரடங்குகள் அடிக்கடி நிகழும் இடப் பெயர்வுகள் மாதக் கணக்கில் காடுகளில் அலைந்த நாட்கள் பல வேளைகளில் ஒரு நேர உணவு கூட இல்லாமல் ஒடுங்கிய பொழுதுகள் அவற்றோடு ஒப்பிடும் போது இது ஒரு பொருட்டாகவே இல்லை ஆனாலும் வாழ்தல் இனிது.

கடந்த இரண்டு வாரம் வீட்டோடு வாழ்வு வெளியில் தனியனாக உடற் பயிற்சிக்காக நடக்கலாம் தூரத்தில் ஒருவரைக் கண்டுவிட்டாலே விலத்தி நடப்பதும் புன்னகை மறந்து தலை குனிவதும் வாடிக்கையாகி விட்டது.

பிரித்தானிய அரசு சில நிவாரணத் திட்டங்களை அறிவுத்துள்ளது அது வந்து சேர சிலரது உயிர் போய் விடும் நிலமை அவ்வளவு சிக்கல் நிறைந்த வழி முறை.அதனுள் பொதிந்திருக்குறது.

இங்கு எதையும் வெளிப்படையாக நினைத்தவுடன் செய்து விட முடியாது நிறுவன மயப் பட்டு இயங்க முடியாது எல்லாவற்றுள்ளும் ஒரு மூடு திரை மயங்கிப் போய் கிடக்கிறது.

உதவி செய்தல் என எல்லாவற்றிலும் கூடுதலான பாதுகாப்பு மிக்க health and safety பேணப்படல் முக்கியமாகிறது இந்த நடைமுறைகளால் எழுந்த மானத்தில் எதுவும் செய்து விட முடியாது.

வெளியில் வந்து பேச முடியாத வாழ்வனுபவத்தோடு நாட்களை கடக்கும் மனிதக் கூட்டம் இங்கும் அதிகம் உண்டு.

ஒரு காலத்தில் சூரியன் மறையாத சாம்பிராச்சியத்தை கொண்ட இவர்கள் கனவுகள் கலைந்த நாட்கள் இவை

திணறும் அரச நிர்வாகம் கட்டுப்படுத முடியாத குரோனாவின் அச்சம் நாளும் நாளும் அதிகரிக்கும் மரணங்கள்
ஆனாலும் இவையெல்லாம் கடந்து போகும்

இந்த காலத்தை மக்கள் கடந்து போவார்காள் வரும் வசந்த காலத்துக்காய் வாசல்கள் திறக்கும் பூங்காக்கள் உயிர் பெறும் நீராலான இந்த நாடு நதிகள் தோறும் நாவாயும் அன்னங்களுமாய் நிறைந்து கிடக்க இன்னொரு காலத்துக்காய்