யாழ் ஆயர் ஞானப்பிரகாசம்

(நட்சத்திரன் செவ்விந்தியன்)

யாழ் ஆயர் ஞானப்பிரகாசம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் தரவுகளையும் தருக்கத்தையும் திரித்து கண்டனம் தெரிவித்திருப்பது ஒரு மதத்தலைவர் அரசியலிலும் பல்கலைக்கழக நடைமுறைகளிலும் அத்துமீறி தலையிடுவதற்கப்பால் தனிப்பட்ட அதிகார நலன்களுக்காக conflict of interest அடிப்படைகளிலும் கடுமையாக எதிர்க்கப்படவும் அலசி ஆராயப்படவும் வேண்டியது. ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாத வேறுபல கிறிஸ்தவ பிரிவினரும் முஸ்லீம்களும் இந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பல்லின பல்கலாச்சார மாகாணத்தில் மிகச்சிறுபான்மையரான கத்தோலிக்கரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயர் யாழின் போப்பாண்டவர் போல அத்துமீறுகிறார்.

தமிழ் கத்தோலிக்கர்களில் சிறுபான்மையினரான மிகச்சில ‘ஊராத்துறை’ கரம்பொன் வெள்ளாள குடும்பங்களே முழுத்தமிழ் கத்தோலிக்கர்களையும் நாட்டாமை செய்கிறார்கள். தமிழ் கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் கரையார்கள். இதைவிட கணிசமான தமிழ் தலித் சாதியினரும் கத்தோலிக்கர்கள். இலங்கையில் அதிகளவு கத்தோலிக்கர் வாழும் மாவட்டமே மன்னார் மாவட்டம்தான். இன்றுவரையும் கரம்பொன் வெள்ளாள மாபியாவின் அடாவடித்தால் ஒரு கரையாரையும் தலித்தையும் ரோம திருச்சபையால் ஆயராக்கமுடியவில்லை.

ஊராத்துறையில் கடையார் என்றொரு சாதி உண்டு. வேதக்கார கடையாரில் சிலர் படித்துமுன்னேறியதும் ஆதிக்கம்மிக்க கரையாரையே நாட்டாமை செய்யவெளிக்கிட்டார்கள். கத்தோலிக்க கரையாரை தொடர்ந்தும் அடக்கிவைப்பதற்காக கரம்பொன் மாபியாவால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்தான்
கடையரான தோமஸ் சவுந்தரநாயகம். சவுந்தரநாயகம் முதலில் மன்னாரினதும் பின்னர் 2015 வரை யாழ்ப்பாணத்தினதும் ஆயராக இருந்தவர். இவரைத்தொடர்ந்து யாழின் ஆயரான ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கரம்பொன் வெள்ளாள மாபியாவின் இன்றைய லொக்கா. ஆள் லேசுப்பட்டவரல்ல.

1. 1982-1984 காலத்தில் யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிக விரிவுரையாளராகவும்
2. 2012 ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலாநிதிப்பட்ட ஆய்வு பரிசோதகராகவும்
3. 1998 இலிருந்து 2014 வரை யாழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக டக்ளசினால் பரிந்துரைக்கப்பட்டு உறுப்பினராகவும் (இதன்போது டக்ளசின் அடிவருடியாக இருந்து டக்ளஸ் சொன்னபடி செய்தும் வாக்களித்தும் பல்கலைக்கழகத்தை குட்டிச்சுவராக்கியவர்)
4. 2002-2007 வரை யாழின் கத்தோலிக்க அதிகார மையமொன்றான சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.

ஞானபிரகாசம் ஆயர் பதவிக்காகவும் 2007 ல் சவுந்தரநாயகத்தின் Vicar general (தலமை செயலாளர்) ஆக வருவதற்கும் அப்போதைய ராணுவத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கவுக்கு வாராவாரம் விஸ்கி போத்தலுடன் சென்று பாட்டிவைத்து அவர் மூலம் மகிந்த ராஜபக்ச ஊடாக கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் ஆதரவுடன் ஆயராக வந்தவர். இவர் Vicar general ஆக இருந்த காலப்பகுதியில் பாதிரிகளால் நடத்தப்பட்ட கொன்சொலிற்றா போன்ற பல வல்லுறவு-தற்கொலை பாலியல் கொடுமைகளை வெற்றிகரமாக மூடிமறைத்தவர்.

கரம்பொன் கத்தோலிக்க வெள்ளாள மாபியா
வல்வை மாபியாவோடு எழுதாத ஒப்பந்தத்துக்கு வந்தது வரலாறு. விடுதலைப்புலிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு லாபியிஸ்டாக செயற்படுமென்றும் பதிலுக்கு கத்தோலிக்க கரையாரை ஓரங்கட்டி கரம்பொன் மாபியா கத்தோலிக்க பதவிகளை அலங்கரிப்பதில் புலிகள் தலையிடக்கூடாது என்பதும் ஒப்பந்தம். இதனை தக்கவைக்க முன்னைய கரம்பன் மாபியா லொக்காவும் யாழ் ஆயருமான பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை கத்தோலிக்க வெள்ளாள புரோகிதன் அன்ரன் பாலசிங்கத்தோடு மிக்க இசைந்து போனார். கரவெட்டி Sacred Heart college ல் பாலசிங்கம் மாணவராயிருந்தபோது ஆசிரியர்/ அதிபராயிருந்தவர்தான் தியோகுப்பிள்ளை.
தியோகுப்பிள்ளை யாழ் ஆயராக இருந்தபோது பாலசிங்கம் சொன்னபடி ராஜினி திராணகமவை கொன்றது EPRLF என்றே மக்கள் நம்புகிறார்கள் என்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் ஒப்புவித்தார்.

சோழியன் குடும்பி சும்மா ஆடாது. இவ்வளவு வரம்புமீறி மாறிய சனநாயகவெளியையும் பொருட்படுத்தாது ஊழலும் சாதிவெறியும் உள்ள கடந்தவருடம் சிங்களமாணவர் மீதான தாக்குதலுக்கு மறைமுக காரணமான சிறி சற்குணராஜாவுக்காக ஆயர் வக்காலத்து வாங்குகிறார் என்றால் அவர் அச்சப்பட காரணங்கள் உண்டு. முதுகெலும்பு மிக்க ஊடகங்களும் சமுக வலைத்தளக்காரரும் ஞானப்பிரகாசம் பாதிரியாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்-நிர்வாகியாகவும் செனற் உறுப்பினராகவும் இருந்தபோது செய்தவைகளை புலனாய்வு செய்யவேண்டும். பாலியல் குற்றங்கள் கத்தோலிக்க பாதிரிகளில் மலிந்தவை. தேடினால் அதையும்தாண்டி பல மோசமான நிருவாக ஊழல் மோசடிகள் யாழ் ஆயரின் பொதுவாழ்வில் வெளிவரும்.