விக்கியின் கனவு வீணாகிப் போகுமா?

-க. அகரன்

மாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம்.