விக்னேஸ்வரனின் அரசியல்

ஆனாலும் விக்னேஸ்வரன் தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றமைக்கு மறைந்த “மாவீரன் ” பிரபாகரனும் ஒரு காரணம் என்று நம்புகிறார். மொத்தத்தில் அதி தீவிர தமிழ் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் எடுக்க முடியும் , அதற்கான தீவிர தமிழ் மக்கள் அணியொன்று வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளது என்று அவர் நம்புகிறார் போலும் ! போதக் குறைக்கு தீவிர இனவாதம் பேசும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் வேறு அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.


“வளர்த்த கடா மார்பில் பாய்ந்த “ கதையாய் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வீறு கொண்டு எழுந்திருக்கிறார், தன்னை வளர்த்துப் போஷித்த சம்பந்தன் அணியை முட்டத் துணிந்துள்ளார். தமிழ் மக்கள் , இது எங்கு போய் முடியுமோ என்று ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள் !
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் உச்ச பட்ச தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு (சம்பந்தன் தலைமை) தமிழர்களை ஏமாற்றப் போகிறது , தமிழர் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலில் வெளியிட்ட ,அம்மக்களின் ஆணை பெற்ற தீர்வினைப் பெற முயற்சிக்கவில்லை என்பதே தமிழ் பேரவையின் பிரதான நோக்கம்.

முன்னாள் சட்டமா அதிபரும், பின்னாளில் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ,குறிப்பாக இடைக்கால தன்னாட்சி வரைபுகளில் தனது கைவரிசையைக் காட்டிய சிவா பசுபதி இந்தப் பேரவைக் கூட்டில் இணைய விரும்பவில்லை.

(Bazeer Seyed)