ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அமெரிக்காவில் வாழ்வதும் மடிவதும் ஒரு அழகிய கனவு என்று அமெரிக்காவின் கொத்துக்குண்டுகளிலிருந்து தப்பிய அப்பாவிகள் முகநூலில் அங்கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தகவல்கள் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு இப் பதினைந்து வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான். பச்சிழம் குழந்தைகளும், முதியவர்களும் கூட…

அதே அமெரிக்காவின் இருதயப் பகுதியில் அழித்தவர்களுடன் சரிசமமாக உட்கார்ந்து மனித உரிமையையும், போர்க்குற்றத்தையும் குறித்துப் பேசிவிட்டு தம்மைத் தேசியவாதிகள் என மார்தட்டிக்கொள்ளும் பிழைப்புவாதிகள் அப்பாவிகளல்ல. அழிவுகளைத் திட்டமிட்டவர்கள். இனப்படுகொலையின் மறைமுகமான சூத்திரதாரிகள்.

தானே திட்டமிட்டு இரட்டைக்கோபுரத் தாக்குதலை நடத்திய அமெரிக்க அதிகாரவர்க்கம் ஆப்கானிஸ்தானையும் உலகையும் ஆக்கிரமிப்பதற்கான நியாயத்தை உருவாக்கிக்கொண்டது. தலிபான்களையும் இஸ்லாமியத் தீவிவாதத்தையும் திட்டமிட்டு உருவாக்கிய அமெரிக்க அரசு, உலக மக்களின் கண்களை மண்ணைத் தூவிவிட்டு கனிமங்களையும், எண்ணை வளத்தையும் மட்டுமன்றி போதைப் பொருள் வர்த்தகத்தையும் கையகப்படுத்துவதற்கான யுத்தத்தை உலகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்டது.

வன்னியில் சாரி சாரியாக மக்களின் உயிர்களைக் குடிகொண்ட கொத்துக்குண்டுகள் பரிசோதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிமங்களை அபகரிப்பதற்காகவே அமரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது எதிரியைத் தானே உருவாக்கி அவர்களை அழிக்கிறோம் என்று நாட்டை ஆக்கிரமித்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மைக்காலமாக ஆப்கானில் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வது அமரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட நேட்டோ நாடுகளின் பிரதான பணி என்ற தகவல்கள் ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் விற்பனையாகும் ஹெரோயீன் போதைப் பொருட்களில் 90 வீதமான பகுதி ஆப்கானிஸ்தானிலிருந்தே உற்பத்தியாகிறது. ஆக அமரிக்கா பிரித்தானியா உட்பட நேட்டோ நாடுகளே உலக மக்களின் ஒரு பகுதியைப் போதைப் பொருளால் கொலைசெய்யும் கிரிமினல்கள் என்பது வெளிப்படை.

2001 ஆம் ஆண்டு அமரிக்க இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொப்பி பயிர்ச்செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. Pittsburgh Post-Gazette என்ற நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் பொப்பி பயிர்ச் செய்கை புறக்கணிக்கத் தக்கதாகவே இருந்தது.

தலிபான்கள் பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தனர். ஒரு பகுதி தலிபான்கள் சி.ஐ.ஏ இன் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கிவந்தனர்.
உள்ளூர் தலிபான்கள் பொப்பி பயிர்ச் செய்கையை முற்றாக தடை செய்திருந்தனர்; இதனால் போதைப் பொருள் வர்த்தகம் தடைப்பட்டுப் போயிருந்தது. பொப்பி பயிர்ச்செய்கையின் மறு பிறப்பிற்கு அமரிக்க இராணுவம் வசதியேற்படுத்திப் பாதுகாப்பு வழங்கியது.

2001 ஆம் ஆண்டில் அமரிக்க ஆக்கிரமிப்பு நடைபெற்று ஒருவருடங்களுக்கு உள்ளாகவே பொப்பி பயிர்ச்செய்கை 657 வீதத்தால் அதிகரித்து. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் அமரிக்கா விளக்குப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த தலிபான்கள் பொப்பி பயிர்ச்செய்கையைத் தேடித்தேடி அழித்துக்கொண்டிருக்க அவற்றிற்கு அமரிக்க இராணுவம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தது.

ஆப்கானின் ஜனாதிபதி ஹமிட் கார்சாயின் சகோதரர் அகமட் வலி கார்சாய் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல உலகின் மிகப்பெரும் போதைப்பொருள் தரகராகக் கருதப்படுபவர். ஆப்கானிஸ்தானில் ஒபியம் போதைப் பொருளின் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்பவர்.
ஆப்கானிஸ்தானில் அமரிக்காவின் நிதி வழங்கலில் போதைப் பொருள் உற்பத்தியை மீட்டெடுத்தவர் அகமட் வலி கார்சாய்.

2009ம் ஆண்டு நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டிலிரு சி.ஐ.ஏ இடமிருந்து அகமட் வலி ஹார்சாய் இற்குப் பணம் சென்றதற்கான ஆதரங்கள் வெளியிடப்பட்டன. The Golden Crescent drug trade என்று பெயரிடப்பட்ட போதைப் பொருள் பயிற்செய்கை 1980 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. அமரிக்க அரசு இதற்கான முதலீடுகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டது. தலிபான்களால் அழிக்கப்பட்ட இந்த மல்ரி பில்லியன் வியாபாரம் அகமட் வலி ஹார்சாயின் ஊடாக மீட்டெடுக்கப்பட அவரது சகோதரர் அமரிக்க ஆதரவுடன் நாட்டின் ஜனாதிபதியாகிறார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வியாபாரத்திற்கு அமரிக்க மற்றும் நேட்டோ இராணுவம் தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்கிவருகிறது. தகவல்கள் கசியத் தொடங்கியதும் வழமைபோல பல்தேசிய ஊடகங்கள் தமது பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. பொப்பி பயிர்ச்செய்கையைப் அழிப்பதற்குப் பதிலாகப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு இராணுவம் தள்ளப்பட்டுள்ளது என்று அதனை அழித்தால் உள்ளூர்மக்கள் தலிபான்களுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் பிரச்சாரங்கள் உலக அளவில் ஆரம்பிக்கப்பட அமரிக்காவின் பயங்கரவாதம் தடையின்றி ‘ஜனநாயக’ ரீதியாக அரங்கேறுகிறது