தமிழ் மக்கள் பேரவை எங்கே செல்கின்றது

(சாகரன்)

PLOTE அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், EPRLF கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பேரவையானது (Tamil People Council – TPC) ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்… – Facebook News(Alex Verma)
கேட்க நல்லா இருக்கு.

அப்போ தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்துகொண்டு தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டு அல்லது எதிர்காலத்தில் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையை கொண்டு நடத்துவதாக உத்தேசம் போல் இருக்கு. எங்கேயோ உதைக்கிற மாதிரி இருக்கின்றது……60 வருடகளின் அரசியல் பாடங்கள் உணர்த்தும் செய்திகள் இவை.சம்மந்தர் தரப்பிற்கு சர்வதேசத்தின் கவனிப்பு, எதிர்கட்சித் தலைவர் பதவி எல்லாம் இருந்தும் ஏதும் நடப்பது போல் தெரியவில்லை. கிழக்கில் இரண்டு அமைச்சர், வடமாகாண சபை எம் வசம் பாராளுமன்றத்தில் கணிசமான ஆசனங்கள் சர்வதேசத்தின் கடைக்கண்பார்வையில் சம்மந்தனின் அறிகைகள் பேச்சுகள்.

நீதியரசரின் முதலமைச்சர் பதவி புலிகளின் மிரட்டல் அற்ற சூழல் டக்ளஸ் சேடம் இழுக்கும் நிலமை, பெருமாளைக் காணவே இல்லை என்ற சாதகமான? அம்சங்கள் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. இலங்கை அரசு ஒன்றையும் செய்யவிடுதில்லை என்ற கோஷம் மாத்திரம் எப்போதும் போல் உரத்தே ஒலிக்கின்றது. வவுனியா மாநகரசபையில் புலிகள், இலங்கை அரசுகளின் நெருக்குவாரத்தின் மத்தியில் புளொட் லிங்கநாதனால் சாதித்ததையும்; செல்லையன் கந்தையன்; ஆனந்த சங்கரி, சுபத்திரன் என்பவர்களில் பக்க பலத்துடன் இதேமாதிரியான சூழலில் யாழ் மாநகர சபையூடாக யாழ்பாணம் நூலகத்தை திறந்து செயற்பட்ட அளவிற்கும் ஏதும் இன்று நடை பெறவில்லை. ஆக ஐங்கர நேசன் செய்யும் மரம் நடப்’படும்’ (ஆழமாகவாசிக்கவும்) என்பதற்கு அப்பால்……