தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!

(தோழர் ஜேம்ஸ்)

இன்று தோழர் றொபேட்டின் 13 வது நினைவு தினம். ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் மக்களின்; சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்காகவும் தனது உயிரை அர்பணித்த ஒரு போராளியின் நினைவுநாள் இன்று. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த றொபேட்டின் அரசியல் காரியாலயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவர் விடுதியில் பதுங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிப் பாசிஸ்ட்களின் கோழைத்தனமான சினைப்பர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்தார். இது நடைபெற்றது ஜுன் 14, 2003 ஆண்டு. 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரபாகரனுக்கும் ரணில் விக்கரமசிங்காவிற்கும் இடையே நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைப் படி தோழர் றொபேட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்திலும் போர் நிறுத்தமும், ஸ்கண்டிநேவியன் நாடுகளின் சர்சதேசக் கண்காணிப்பு குழுவும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் செயற்பாட்டிலிருந்த வேளையிலேயே இப் படுகொலை நடைபெற்றுள்ளது.

போர் நிறுத்தம் தமக்கும் எமது மக்களின் எதிரியான இலங்கை இராணுவத்திற்கும் இடையில் பெரும்பாலும் கடைப்பிடித்திருந்த புலிகள் மாற்றுக் கருத்தாளருக்கு எதிராக தமது கொலை வெறியாட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தனர் என்பது இங்கு கவனிக்கதக்கது. இது போன்ற செயற்பாடுகளை முறைப்பாடாக கண்காணிப்பு குழவிடம் முன்வைத்த போதெல்லாம் தாம் கண்காணிப்பாளார்கள் ம்டடுமே அதாவது நடப்பனவற்றை கண்ணால் பார்பவர்கள் மட்டும் என்பது போல் அர்த்தமற்ற பதில்களையே மக்கள் நோர்வே அனுசரணையாளர்களிடம் அன்று பெறக் கூடியதாக இருந்தன. அமெரிக்க அனுசரணையாளர் நோர்வேயும் அவர்களுக்கு சார்பான ஸ்கன்டிநேவியன் நாடுகளும் மேற்கூறியவாறு பொறுப்பு கூற மறுத்து வந்தனர்.

போர்நிறுத்தத்தை சரியாக கடைப்பிடிக்க முற்பட்ட கண்காணிப்பு குழுவில் அங்கத்துவம் வகித்த சில ஸ்கன்டிநேவிய நாட்டின் உறுப்பினர்கள் புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து இந்த நாட்டுப் பிரதிநிதிகள் கண்காணிப்பு குழுவிலிருந்து புலிகளால் தமக்கு ஏற்படவிருந்த பாதுகாப்பு கருதி வெளியேறினர். இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தன நோர்வேயும் இவர்களுக்கு சார்பானவர்களும். இதுவே தோழர் றொபேட் போன்றவர்களின் மரணத்திற்கு வாய்ப்புக்களை எற்படுத்தியிருந்து.
இந்த போர்நிறுத்த காலத்தில் இலங்கை இராணுவம் முற்றாக முகாங்களுக்குள் முடங்கி கிடக்க தினமும் சராசரியாக தமிழ் பிரதேசம் எங்கும் 4 தொடக்கம் 5 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதே வரலாறு.

இதற்கான ஆதாரங்களை அன்றைய தமிழ் தினசரிப் பத்திரிகைகளின் செய்திகளில் பார்க்க முடியும் இவை அனைத்தையும் செய்தவர்கள் புலிகள் இதனை சும்மா பார்த்துக்கொண்டு இருந்ததே சர்வதேச கண்காணிப்பு குழுவும் நோர்வேயும். ஒரு வகையில் இந்த மௌனம் புலிகளின் கொலைகளுக்கு வழங்கிய அங்கீகாரமாகவும் அமைந்தது என்பதே யதார்த்தமானது. இந்த கொலைகளால் ரணில் விக்ரசிங்க அரசிற்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. தமது இராணுவம் முகாங்களுக்குள் முடங்கி கிடக்க தாம் செய்ய வேண்டிய தமிழ் மக்கள் அழிப்பை புலிகள் இலங்கை அரசிற்கு எந்த செலவும் இல்லாமல் செய்து முடிக்கின்றனர் என்ற கொண்டாடும் மனநிலையில் அவர்கள் இருந்தனர்.

இந்த போர்நிறுத்த மீறல்களையும், புலிகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரிடம் அம்பலப்படுத்தும் செயற்பாட்டை செய்வதில் ஒருவகை இணைப்பு செயற்பாட்டாளராக ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தோழர் றொபேட்டின் செயற்பாடு அமைந்தது. சம கால கட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மத்தியில் தனிப்பட்ட விஜயமாக யாழ் சென்று நான் உயிர்தப்பியது அதிஷ்டம் என்ற சூழலில் இவற்றை நேரில் கண்ட சாட்சியமாக இருக்கின்றேன்.

சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் என இரு யாழ் மாநகர சபை முதல்வர்களை புலிகள் படுகொலை செய்த பின்பு மாநகர சபை முதல்வர் பதவியை ஏற்று செயற்பட பலரும் பயந்த சூழ்நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரியிற்கு உறுதுணையாக நின்று செல்லையன் கந்தையனை யாழ் மாநகர சபை முதல்வாராக நியமித்ததாக இருக்கட்டும், பாதுகாப்பிற்கு நாம் இருக்கினறோம் என்று தைரியமும் கொடுத்து பாதுகாப்பும் வழங்கிய இவர் இறுதியில் எமது மக்களுக்காக தன் உயிரை புலிகளின் சூழ்ச்சிகளை குறைவாக மதிப்பிட்ட நிலையில் கொடுக்க வேண்டியேற்பட்டது.

செல்லையன் கந்தையன் தலமையில் செயற்பட்டு வந்த யாழ் மாநகர சபையை சரியான திசைவழியில் கொண்டு செலுத்திய மாலுமியாக தோழர் றொபேட் செயற்பட்டவர் என்பது யாழ்மாநகர சபையில் அன்று இடம்பெற்ற உறுப்பினர்கள் யாவரும் அறிந்த ஒன்றாகும். இதன் தொடர்சியாக ஜேஆர் அரசின் இலங்கை இராணுவத்தினால் கொழுத்தியெரிக்கப்பட்;ட யாழ் நூலகத்தை மீள் கட்டியெழுப்பவதிலும் இதனைத் மக்களின் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கும் நிலைவரை கொண்டு வந்த உழைப்புக்களும் இவரின் செயற்பாட்டிற்கு கிடைத்த அடையாளங்கள் ஆகம். இதில் இவருடன் தோளோடு தோள் கொடுத்த தோழர்கள் சுகு, மோகன், கிருபா, கங்கா போன்றவர்களின் அர்பணிப்பக்களை நாம் தோழர் றொபேட்டின் நினைவு கூரும் இடது குறிபிடுவது சாலச் சிறந்தது.

ஒரு புறம் பிரபாகரன் ரணில் விக்ரமசிங்கா சமாதானம் என்ற செயற்பாடு சர்வதேச கண்காணிப்பு குழு, புலிகளை மட்டும் அரசியல் வேலை செய்ய அனுமதித்தல் என்ற வகையில் புலிகள் தமிழ் பிரதேசம் எங்கும் சிறப்பாக யாழ்பாணத்தில் கால்வைக்க முடியாத நிலையை சந்திரிகா செய்திருந்த இடம் எங்கும் அரசியல் வேலைகளை செய்யவென அலுவலங்கள் ஆனால் மாற்றுக் கருத்தாளர்கள் யாரும் செயற்படுவதை புலிகள் அனுமதிக்காத இந்த விடயத்தை கருத்தில் கொள்ளாத சர்வதே மத்தியஸ்தம் ஓமந்தை முகமாலை என்ற இரு இடங்களிலும் புலிகளும் இராணுவமும் மக்களை சோதனை என்ற வகையில் இறக்கி எற்றி துன்பறுதிய நிலை. கூடவே மக்களிடம் வரி என்று குண்டூசியில் ஆரம்பித்து குளிசை வரைக்கும் ஆட்டுக்கல்லு தொடக்கம் ஆச்சி பாவிக்கும் வெத்திலைக்கும் வரி போட்ட நிலமை காசுகளை நாள் முடிய சாக்கில் கால் போட்டு அடைந்து அள்ளிய நிலமை என்ற மோசமான காலகட்டத்தில் மக்களின் இயல்பான அடிப்படையான வாழ்விற்கான இலகுபடுத்தல் சேவையை தோழர் றொபேட்டும் அரது சகாக்களும் செய்து வந்தனர்.

புலிகளின் கொலைக் குறி நெருங்கி வருகின்றன என்பதை எச்சரித்தும் பாதுகாப்பிற்காக தற்காலிகமாகவேனும் இடம் பெயர்ந்து தமிழ்நாடு போன்ற இடங்களில் வசிக்க மறுத் தோழர்கள் குழாத்தின் நம்பிக்கையான தலமை சக்தி என்றால் அது தோழர் றொபேட்டைச் சாரும். இதில் கிழக்கு மாகாணத்து துரை இரத்தினத்தையும் அடக்கியே ஆகவேண்டும். இப்படியான மக்களுக்கான அர்பணிப்பு நிலையில் வேலை செய்த தோழர் றொபேட்டைக் கொல்ல வேண்டும் என்பது மக்கள் நலனில் அக்கறையில்லா புலிகளின் முதன்மை வேலைத்திட்டமாக இருந்து என்பதை புரிந்து கொள்ளப்படவேண்டியதே.

தம்மை மட்டும் தக்கவைத்தல் ஏனையவர்களை அழிதலே இதற்கான பாதை என்று விடுதலையின் பெயரால் செயற்படுத்தியவர்கள் தோழர் றோபே போன்ற மகத்தான பல தலைவர்களை கொன்றொழித்ததன் மூலம் இன்று மிகவும் பலவீனமான ஒரு சமூகமாகமாக எம்மவரை விட்டுச் சென்றிருக்கின்றது என்பது வரலாற்றுப் பதிவுகளில் இருந்து கொண்டே இருக்கும்.
(ஜுன் 14, 2016)