ஆஸாத்தின் மீள் பிரவேசம்!

இதே போன்றதொரு நிலையை சிரியாவிலும் ஜனாதிபதி ஆஸாத்தின் ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ள இதே ஏகாதிபத்திய சக்திகள் முயற்சித்தன. ஆனால் ஆஸாத்தின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவும், ரஸ்யா சிரியாவுக்கு தொடர்ந்து அளித்து வந்த திடகாத்திரமான ஆதரவு காரணமாகவும் அவர்களது முயற்சிகள் அத்தனையும் தோல்வி கண்டுள்ளன.

அத்துடன் முன்னர் பெரும்பாலான அரபு நாடுகள் அமெரிக்காவின் சொற்படியே ஆடி வந்தன. அதனால் சிரியாவையும் அதன் ஜனாதிபதி ஆஸாத்தையும் அவை ஒதுக்கி வைத்தன. ஆனால் நிலைமைகள் இப்பொழுது மாறத் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கின் பிரதான நாடான சவூதி அரேபியா இப்பொழுது அமெரிக்காவையும் மேற்குலகையும் படிப்படியாக கைவிட்டு வருவதுடன், ரஸ்யாவுடனும் சீனாவுடனும் அதிகளவில் நட்பு பாராட்டி வருகிறது. அத்துடன், அரபு நாடுகள் மத்தியில் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து அவற்றுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் சவூதி முழு முனைப்புடன் செயல்படுகிறது.

அதன் ஒரு மைல் கல்லாக 22 நாடுகள் அங்கம் வகிக்கும் அரபு லீக்கின் உச்சி மாநாடு இப்பொழுது சவூதி அரேபியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரிய ஜனாதிபதி ஆஸாத்தும் கலந்து கொள்கிறார்.

படத்தில் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த சிரிய ஜனாதிபதி ஆஸாத்தை சவூதி இளவரசர் ஒருவர் ஜெட்டா விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சி.