இந்திய சீன மோதல்…

கொரோனாவில் தன் குடும்பம் என்னாயிற்று? என்று ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரும் கவலைகொள்ளும் இவ்வேளையில் போர் அவசியம்தானா?

இந்த உலகுக்கு கொரோனாவைப் பரிசளித்த சீனா, அதை மிக எளிதாக வென்றுவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றில் நாம் மூன்றாம் இடத்திற்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் போரை எந்த நாட்டு மக்களாவது விரும்புவார்களா?

மோடிக்கு எதிரான அலை நாட்டில் வீசும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிரானப் போர் பற்றிய சிந்தனை மக்களிடம் விதைக்கப்படும்.

இந்திய ராணுவத்துடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் ஒரு சிறிய குழு.

தற்போதைய கொரோனா அலையில் மோடி முகத்திரை முழுமையாகக் கிழிந்துள்ளதால், சீனாவுடனான போர் செய்திகள் வேகமாகப் பரப்பப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்ட சீனாவை நம்மால் வெல்ல இயலுமா? அதுவும் இந்த கொரோனா ஊழிக்காலத்தில்?

தன் சுய நலத்துக்காக மோடி செய்யும் அக்கிரமங்கள் எல்லை மீறுகின்றன.

ஒரு நோய் தொற்றை வெல்ல முடியாத பா.ஜ.க அரசால், சீனாவைப் போரில் வெல்ல முடியும் என்பதெல்லாம், இந்திய மக்களின் தேச உணர்வை தட்டி எழுப்ப உதவுமே ஒழிய, ஒரு நாளும் நம்மை கொரோனா வறுமையில் இருந்து மீட்காது.

கோவிட் 19 வைரஸ்சுக்கு மருந்து கண்டுப்பிடிக்க ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டு ராணுவமும் மரணமடையும் தங்கள் நாட்டு கொரோனா நோயாளிகளை கொத்துக்கொத்தாக அடக்கம் செய்து கொண்டிருக்கிறது.

இரண்டுபேர் மட்டும் தங்கள் மக்களை இப்போதும் வாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் டிரம்ப். இன்னொருவர் மோடி.

முன்னவர் கருப்பின மக்களுக்கு எதிராக.
பின்னவர் சீன ராணுவத்துக்கு எதிராக.

(தாகம்)