கனடியத் தேர்தல் நாள் இன்று

கனடாவில் 5 பிரதான கட்சிகள் தேர்தல் அரசியலில் ஐந்து வீதத்திற்கு மேலான மக்கள் ஆதரவை பெற்ற பிரதான கட்சிகாளக இருக்கின்றன. அதிலும் மூன்று கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அல்லது அதன் போக்கை தீர்மானிக்கும் கட்சிகளாக இருக்கினறன. பிரொஞ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி கியூபெக் என்ற மகாணத்தில் தனது செயற்பாட்டைக் கொண்டுள்ளது.


பிரதான கட்சிகளும் அதன் தற்போதைய தலைவர்களும்…

  1. கனடா பழமைவாதக் கட்சி
    Conservative Party of Canada(PC)
    Erin O’Toole
  2. கனடா நடுநிலைமைக் கட்சி
    Liberal Party of Canada
    Justin Trudeau ஜஸ்ரின் ரூடோ
  3. கனடா புதிய ஜனநாயகக் கட்சி
    New Democratic Party (NDP)
    Jagmeet Singh(ஜக்மீர் சிங்)
  4. கனடா பசுமைக் கட்சி
    Green Party of Canada
    Annamie Paul
  5. People’s Part of Canada (PPC)
    கனடா மக்கள் கட்சி
    Maxime Bernie
  6. க்குயூபெக்கா கட்சி
    Bloc Quebecois
    Yves-François Blanchet

அவை பற்றிய விபரமாக…..

பழமைவாதக் கட்சி: கனடாவின் முதல் வந்தேறு குடிகளான ஐரோப்பிய வெள்ளை இன மக்களால் அதிகம் ஆராதிக்கப்படும் பழமைவாத சிந்தனைகளை அதிகம் பிரதிபலிக்கும் முதலாளித்து சிந்தனை அதிகம் உள்ள கட்சி. கனடாவின் மேற்கு சிந்தனையை பிரதிபலிக்கும் ஒரு வெள்ளை இனத்தவரே அதிகம் தலமையாக வருவதற்குரிய வாய்ப்பை அதிகம் கொண்டு தற்போதும் அவ்வாறு உள்ள கட்சி.

லிபரல் கட்சி: முதல் குடிவரலாளர்களை அதிகம் ஆதரிகும் அதே வேளை மக்கள் நலன்களில் ஸ்கனடிநேவியன் நாடுகளின் நலன் திட்டங்களை சற்று உள்வாங்கிப் பயணிக்கு முற்படும் கட்சி. தந்தையின் வழியில் மக்களுடன் அதிகம் சினேக மனப்பான்மையுடன் பழகும் மிகவும் இயல்பான மனிதர் ஜஸ்ரின் ரூடோ தற்போது தலமையில் உள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சி: ஒரு காலத்தில் சோசலிசம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை தனது கட்சியின் பெயரில் அடையாளத்தில் வைத்திருந்த கட்சி கனடாவின் பூர்வீகக் குடிகள் குடிவரவியலாளர்கள் அண்மையில் பொதுவாக இளைஞர்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை பெருக்கியிருக்கும் கட்சி. இதன் தலைவராக இந்திய பஞ்சாப் மாகாணத்தில் தமது பூர்விகுத்தை கொண்டவர் தலமை வகிக்கின்றார்.

இதற்கு அப்பால் பசுமைக் கட்சி என்று சுற்றுச் சூழல் விடயங்களில் அதிகம் அக்கறையுள்ளவர்களாக தம்மை முதன்மைப்படுத்தும் கட்சி.

மற்றும் அதி தீவிர வலதுசாரி வெள்ளையின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் குடிவரவியலாளரகளை அதிகம் விரும்பாத கட்சி கனடா மக்கள் கட்சி.

பிரஞ் மக்கள் அதிகமாக வாழும் கியூபெக் மாகாணத்தில் அந்த மக்களைப் அதிகம் பிரிநிதித்துவப்படுத்தும் பிராந்தியக் கட்சி புளக் கியூபெக்குவா.

சகல கட்சிகளும் தொழில் உற்பத்தி வியாபாரம் முதலாளிகள் சிறு முதலாளிகள்தான் ஒரு நாட்டின் செல்வத்தை அதிகரிக்கும் என்ற பிரதான கோசத்தை முன் வைத்தாலும் இந்த உற்பத்தி துறையில்… சேவைத்துறையில் உழைப்பாளிகளின் நலன்கள் என்பதில் பிரதான முன்னிலை மூன்று கட்சிகளான பழமைவாதக் கட்சியில் இருந்து புதிய ஜனநாயகக் கட்சி என்று இறங்குகையில் முதலாளிகள் நலன்களை அதிகம் தூக்கி பிடிப்பவர்கள் என்றும், முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதரப்பினரையும் சமரசம் செய்வது போல் காட்டிக் கொண்டாலும் முதலாளிகள் பக்கம் அதிகம் சார்ந்திருப்பவர்களாகவும், தொழிலாளர் நலன்களை அதிகம் காப்பாற்றுவோம் என்று கூறினாலும் ஒரு எல்லைக்கு மேல் அதனை நகர்த்த முடியாத அரசியல் அமைப்பிற்குள் திண்டாடும் கட்சியாகவும் இருக்கின்றனர் முறையே செயற்படுகின்றனர்.
இந்தத் பொதுத் தேர்தல் தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் கோவிட் 19 பெரும் தொற்றை எவ்வாறு கையாண்டார்கள் என்பதிலேயே அதிகம் மையம் கொண்டிருக்கின்றது.

அதிலும் தடுப்பூசிகளைப் பெறுதல் என்பது அத்தியாவசியம் என்பதுவதும் இல்லை அது தனி மனித சுதந்திரம் என்ற போக்கிற்கும் இடையேயான கருத்த மோதல்களுமாக நகரும் நிலமைகள்.

கூடவே பொருளாதாரத்தின் ஸ்திரத் தன்மையை காப்பாற்றுவதில் இந்த பெரும் தொற்றுக் காலத்தில் முதலாளிகளை தாங்கிப் பிடித்ததில் யார் அதிகம் சரியாக சிந்தித்தார்கள் செயற்பட்டார்கள் என்பதற்கும் இடையேயும் நகருகின்றது.

பெரும் தொற்று காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு அரசு காப்பாற்றியது என்பதில் உள்ள வேறுபட்ட கருத்தியல் அடிப்படையில் தேர்தல் களம் அதிகம் போய் கொண்டிருக்கின்றது இன்று தேர்தலையும் சந்திகின்றது.

இதில் கடந்த அரசின் காலத்தில் இந்த மூன்று விடயத்திலும் லிபரல் அரசு மிகச் சிறப்பாக செயற்பட்டது என்ற பொது உணர்வு கனடிய ஏன் உலக மக்கள் மத்தியில் உள்ளது.

ஆனால் பழமைவாதக் கட்சி முதலாளிகள் அது சார்ந்த தொழில் துறை நலிந்து கனடியப் பொருளாதாரம் சிறப்பான நிலயில் இல்லை என்ற குற்றச்சாட்டையும் கட்டாயம் மக்கள் தடுப்பூசிகளை பெறுவதை தாம் ஆதரிக்கவில்லை அது மக்களின் சுதந்திரமான முடிவு என்று மக்கள் ‘சுதந்திரத்தை?’ அதிகம் காட்டும் பழமைவாத சுதந்திர சிந்தனையை கருத்துரைத்து வருகின்றனர்.

புதிய ஜனநாயக் கட்சி கடந்த அரசின் பெரும் தொற்று விடயத்தை கையாண்டதில் லிபரல் அரசின் செயற்பாடுகளுடன் அதிகம் உடன்பட்டாலும் சமான்ய மக்களின் வாழ்வாதாரம் சிறு குறு தொழில் முனைவோருக்கான கை கொடுப்புக்கள் போதாது என்பதையும் விலியுறுத்துகின்றனர்.

குடியிருப்பு கல்வி நிலையங்களில் பூர்வீகக் குடிகளின் குழந்தைகளை அவர்களது குடுப்பத்திடம் இருந்து ஒரு வகையில் நிரந்தரமாக பிரித்தெடுத்து புதை குழிக்குள் அவர்களை அனுப்பியது என்ற விடயம் கனடிய மக்கள் மனத்தில் மனித உரிமை என்ற பொது போக்கில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதுவும் அது பற்றிய அதிக விழிப்புணர்வு கனடிய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதுவும் இத்தேர்தலில் மட்டும் அல்ல இனி வரும் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதில் அனைத்து கட்சிகளும் இந்த நூற்றாண்டு மனித உரிமை மீறல்கள் புதைகுழிகளை கண்டு பிடித்தல் அது பற்றிய விசாரணை அரசு அளவில் மன்னிப்பு சர்வதேச அளவில் பொறுப்புக் கூறல் என்று ஒரு பொது போக்கில் செயற்படுவது ஒரு ஆரோக்கியமாக அரசியலாக உணரப்படுகின்றது.
ஆனால் அழிவு நிலையில் இருக்கும் இந்த பூர்விகு குடிகளை பிரதான நிரோட்டத்தில் இணைத்து ஆங்கிலேயர்களாக மாறவைக்கும் அரசியல் திட்டமிடல்களே அதிகம் செயற்பாட்டில் இருப்பது இங்கு கவனிக்த் தக்கது.
அழிவு நிலையில் இருக்கும் அந்த மக்களின் கலாச்சாரம் பண்பாடு பூர்வீக நிலங்கள் மொழி போன்றவற்றை பேணிப் பாதுகாக்க சிந்தனைகள் திட்டங்கள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது இவ்விடயத்தில் அதிக கரிசனை உடைய இளைஞர்களிடமும் அதுபற்றிய வேலைத்திட்ம் இருப்பதாக அறிய முடியவில்லை.

சர்வதேச விவகாரங்களில் பூமி வெப்பமடைத்தல், சுதந்திர வர்த்தக வலயம், தீவிரவாத்திற்கு எதிரான செயற்பாடுகள் என்பனவற்றில் அமெரிக்காவின் ஒவ்வொரு காலகட்டத்தின் செயற்பாட்டிற்கும் சமாந்தரமாக ஜி 7 நாடுகளுடன் ஒத்தோடும் இயல்பை கொணடிருப்பதான வாதங்களே இந்தத் தேர்தலிலும் ஒலிகின்றது.

இந்திய விவசாயிகளின் போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து இந்த அரசின் கண்டனத்தை பெற்றுக் கொண்டதும் இந்த லிபரல் அரசுதான். அதே வேளை கனடா ஒரு தேசம் பூர்வீககுடிகளாகிய நாங்கள் ஒரு தேசம் என்ற உணர்வுடன் தேசத்துடன் தேசம் பேசுவது போல் கொரனா ஆரம்ப காலத்தில் கியூபா மருத்துவ உதவியை பூர்வ குடிகளாகிய நாங்கள் பெறப் போகின்றோம் இதற்கு கியூபா தயாராக உள்ளது என்பது போன்ற மனிதாபிமான வேண்டுகோளுக்கு அனுமதி மறுத்ததுதும் இதே கனேடிய அரசுதான் என்ற வகையிலான சர்வ தேச அரசியலை ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் அரசு கொண்டிருத்தது என்பதில் இருந்து கனடிய அரசின் செயற்பாட்டை மதிப்பீடு செய்ய முடியும்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் பெரும் தொற்று முடிவடையாத காலத்தில் அவசரப்பட்டு ஆதிகாரத்தை தொடரந்தும் வைத்திருத்தல் என்று அதிகாரப் பசியில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. இது தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரான புள்ளி விபர அடிப்படையில் தமக்கான அறுதிப் பெரும்பான்மை மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று அரசைக் கலைத்து தேர்தலை சந்திக்க வைத்தது.

ஆனால் எனைய அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிவித்த பின்பு பொதுமக்களும் இந்த அவசரக் கோலத்தை இரசிக்கவில்லை. இதனை எதிர்கட்சிகள் சரியாக கையாண்டனர்.

அதனால் மக்கள் மத்தியில் ஒரு மாத தேர்தல் பிரசாரக் காலத்தில் லிபரல் கட்சியிற்கான ஆதரவு தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் நிலமையில மீண்டும் ஒரு சிறுபான்மை அரசுதான் அமையும் என்ற புள்ளிவிபரங்கள் கூறும் நிலையில் இன்று மக்கள் தேர்தல் வாக்குச் சாவடிகளை நோக்கி பயணத்தில்.

நானும் அங்குதான் செல்கின்றேன்… வாக்களிக்க எனது இடதுசாரிச் சிந்தனையுடன்