ருவாண்டா படிப்பினைகள் – 03

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

ஆபிரிக்கர என்றால் நாம் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நம் மனக் கண் வருவது வெயிலின் தாக்கத்தினால் வரண்ட செம்மண்ணும் மரங்களேயற்ற பரந்த மணல்வெளிகளில் வாழுகின்ற வயறுஎக்கிய அல்லது வயறு வெளித் தள்ளிக்கொண்டு உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் வெளித்தெரியும் மனிதர்களும் தான்.