அடுத்த பொதுச்செயலாளர் யார்?- அதிமுக பொதுக்குழு 29-ம் தேதி கூடுகிறது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.  அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத் தில் நடக்கிறது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

அதிமுகவின் பொதுச்செய லாளராகவும், தமிழக முதல்வராக வும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே, அதிமுக எம்எல்ஏக் கள் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வத்தை தேர்வு செய்தனர்.

இதற்கிடையே, பொதுச்செய லாளர் மட்டுமின்றி சசிகலா தமிழக முதல்வராகவும் வரவேண்டும் என்ற கோரிக்கை அமைச்சர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங் கள், அமைப்புகள் சசிகலாவை சந்திக்கும் போது, பொதுச் செயலாளர், முதல்வர் பதவிகளுக் கும் அவர் வரவேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையில், இந்தாண்டு இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அக்கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவி்த்தன. ஒருவேளை சசிகலா, தான் பொதுச்செயலாளராக விரும் பாவிட்டால், டி.டி.வி.தினகரனை பொதுச்செயலாளராகக்க தி்ட்ட மிட்டுள்ளதாகவும் அந்த வட் டாரங்கள் தெரிவித்தன.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக மாவட்ட செய லாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கி னார். அதில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம், டிசம்பர் 29-ம் தேதி, காலை 9.30 மணிக்கு வானகரம், ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.