அமெரிக்க துணைத் தூதரை நீக்கியது ரஷ்யா

ரஷ்யா கோரிய பாதுகாப்பு முன்மொழிவுகள் மற்றும் உத்தரவாதங்கள் தொடர்பில் வாஷிங்டன் ரஷ்யாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பதிலைப் பெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷ்யாவின் அமெரிக்க துணை தூதர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தமது படைகளை திரும்பப் பெறுமாறு அமெரிக்காவிடம் ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளதாக அரச செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்யா போரை விரும்பவில்லை, ஆனால் உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ளும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் நேட்டோவும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவசரமாக உறுதியளிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோரியுள்ளார்.