அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்து

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று (15.01.2016) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. இன்றும் இந்த அமர்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. நேற்று தனிநபர்களும் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை நேரில் சமூகமளித்து வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்தனர்.


ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழர் மகா சபை சார்பிலும் அரசியல் யாப்புக்கான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நேற்று மட்டும் கட்சிகள் சார்பிலும் பொது அமைப்புக்கள் சார்பிலும், தனிநபர்களாகவும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு 36 பேர் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு (தி. சிறீதரன்) தோழர் மோகன், கிருபா ஆகியோர் மேற்படி அமர்;.வில் சமூகமளித்து பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.
இலங்கை ஐக்கிய ஜனநாயக குடியரசு என தாபிக்கப்பட வேண்டும் எனவும் நாட்டின் அரசியல்யாப்பே உயர்ந்ததாகக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த முன்மொழிவுகளில் இந் நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களினதும் அபிலாi~களை முழுவதுமாக உள்ளடக்கி அவற்றைப் பேணிப்பாதுகாப்பதன் மூலமாக நாட்டின் ஐக்கியத்தையும் இறமையையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சம~;டி, ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். எனவும் சிங்கள்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் ஆகியோர் இலங்கையின் பிரதான தேசிய சமூகங்கள் ஆவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரவை நாடாளுமன்ற முறை, உப ஜனாதிபதி, மத சார்பற்ற அhசு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகளுடன் வடக்கு கிழக்கு இணைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் எல்லைகளை மீள் வரைதல், மாகாண அரசாங்கம், மாகாண நீதித்துறை, மாகாண சட்டமா அதிபர், மாகாண பொல்pஸ் அமைப்பு, மத்தியினதும் மாகாணங்களினதும், நிதி மூலங்கள், மத்தியிலும், மாகாணங்களிலும் அரச நிறுவனங்கள்pல் இன விகிதாசாரத்தை பேணுதல், மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள். அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளில் பாராளுமன்றம் சட்டங்களை ஆக்குவதற்குரிய விடயங்கள், மாகாண சட்டசபை சட்டங்களை ஆக்குவதற்குரிய விடயங்களும் இணைப்பாக பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில்; சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் யாப்பு முன்மொழிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. பாராளுமன்றம் உட்பட சட்டவாக்க சபைகளிலும், இதர அரசாங்க நிறுவனங்களிலும் பெண்கள் மற்றும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் என்பன குறித்தும் அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழுவினரிடம் எடுத்துக் கூறப்பட்டது.