ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடப்பட்டதா?

இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சரியானது அல்ல. இன்னும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு காரணமாக சில ஸ்டாஃப்கள் வெளியேறிவிட்டதாகவும், அவசர தேவைக்காக மட்டும் தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன்பிறகு அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன.