இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட்-19 தொற்றாளர்களாக 3538 பேரும், கொவிட்-19 காரணமாக 44 பேரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1132 ஆக அதிகரித்துள்ளது. 

கொழும்பில், பல பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்களாக 800 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கொ​விட்-19 தொற்றொழிப்பின் தேசிய மத்திய நிலையத்தின் தகவல்களின் பிரகாரம் நாரஹேன்பிட்டியவில் கொரோனா தொற்றாளர்கள் 73 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின் பிரகாரம் ​வெள்ளவத்தையில் 45 பேரும், அவிசாவளையில் 51 பேரும், தெஹிவளையில் 43 பேரும், மஹரகமவில் 56 பேரும், கல்கிஸையிலி 32 பேரும், பிலியந்தலையில் 74 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன்  இதுவரை முல்லைத்தீவில்  501 பேர் கொரோனா தொற்றுடன்  அடையாளம் காணப்பட்டு, கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அவர்களில் 58 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஏனைய 443 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுடன்  தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,310 குடும்பங்களைச் சேர்ந்த 5019 பேர் தனிப்பட்டுள்ளனர்.  768 குடும்பங்களைச் சேர்ந்த 2,845 பேர்  தனிமைப்படுத்தலை  நிறைவு செய்துள்ளனர். ஏனைய 538 குடும்பங்களைச் சேர்ந்த 2,153 பேர் தற்போதும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவரும் 443 நபர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 23 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 75 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 342 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஒருவரும்,  மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருவருமாக 443 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்  

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  58  நபர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 02 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 13 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 16 பேரும் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 17 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 10 பேருமாக 58 பேர் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

இதேவேளை முல்லைத்தீவு மாவடடத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றாளருடன் தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் தொடர்ந்தும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள 538 குடும்பங்களில்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 78 குடும்பங்களும்  கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 93 குடும்பங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 341 குடும்பங்களும் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 12 குடும்பங்களும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8 குடும்பங்களும் வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவில் 06 குடும்பங்களுமாக  538 குடும்பங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள்  தெரிவிக்கின்றன