இலங்கை: கொரனா செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது. இது செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், இலங்கையில் 18,000 மரணங்கள் இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார ஸ்தாபனத்தின்  நிபுணர் குழு ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன், உயிர்களைக் காப்பாற்ற இப்போது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.


ஸ்ரீ போகரின் அவதாரமாகிய ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70வது குருபூஜை தினமான நாளை (14 ) மிகுந்த கட்டுப்பாடுகளுடன் யாகமும் ,குருபூஜையும் மாத்திரமே இடம்பெறவுள்ளது. எனினும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக இன்றும் (13), நாளையும் (14)
பக்தர்கள் ஆலயத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எவ்வித பூஜை மற்றும் அன்னதான பொருட்களை ஆலயத்திற்கு வழங்க முடியாது எனவும், அதேபோன்று எவ்வித பிரசாதமும் வெளியில் எடுத்துச்செல்லவும் முடியாது எனவும், ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிகையிலா​னோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர். நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்  பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.