சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.

இதை எல்லாம் அரசியல் அரங்குக்குக் கொண்டு வந்தவர்களும் பைத்தியக்காரர்கள் தான்.  தமிழர் விடுதலை போராட்டம் தொடர்பில்இதவறான எண்ணப்பாட்டில் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாகஇ விடுதலைப் போராட்டம் குறித்து சிங்களவர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அவர்கள் மீது போர் தொடுக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.


வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மு.திருநாவுக்கரசின் இலங்கை அரசியல் யாப்பு தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
‘எமது விடுதலைப் போரை குற்றஞ்சாட்டி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மிக மோசமாக திரிவுபடுத்தப்பட்ட விடயங்களைக் கொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் எவையும் அங்கு இல்லையென்பது வேதனையான விடயம்.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எழுத்தாளர்கள் எமது வரலாற்றை எழுத முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.

பொய்யாக புனையப்பட்ட இந்த புத்தங்களை மேற்கோள்காட்டி பல வெள்ளைக்காரர்கள் தங்களுடைய புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்களுக்கு பல நாடுகள் நிதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழர் என்றால் மோசமானவர்கள் என்று சர்வதேசம் எண்ணக்கூடிய வகையில் அந்த புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிங்களவர்கள் ஆங்கிலத்தில் புலமைபெற்று பல புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தால் நாம் அவர்கள் மீது மிகப்பெரிய போரை தொடுக்க வேண்டிவரும்.

இவ்வாறான புத்தகங்கள்தான் அதிகம் எழுதப்பட்டு நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் எழுத்தாளர் மாஸ்ரனின் புத்தகங்கள் போன்று பல புத்தகங்கள் தமிழில் வெளிவரவேண்டும். தமிழர் வரலாற்றை மாஸ்ரன் சிறப்பாக பதிவு செய்துள்ளார். 2008ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நாம் அழிவை சந்திப்போம் என தீர்தக்கதரிசனமாக அவர் கூறியிருந்தார். விடுதலைப்புலிகள் இருக்கும் போது நாங்கள் ஏன் இவ்வாறானதொரு அழிவுக்கு செல்லப் போகின்றோம் என நாங்கள் அதை நம்பவில்லை.
அப்போதிருந்த பலரது சிந்தனைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. ஆனால் மாஸ்ரனின் சிந்தனை ஆற்றல் என்பன எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றன’ என்றார்.