ஜேர்மன் மாதிரி அடிப்படையில் புதிய தேர்தல் முறைமை

ஜேர்மன் மாதிரி என இலங்கையில் பிரபலமாக சொல்லப்படுகின்ற தேர்தல் முறைமை உள்ளடங்கலான புதிய அரசியலமைப்புத் திட்டம் ஒன்று தொடர்பிலான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களிடையே நீண்டகாலமாக நிலவும் மனக்குறையை தீர்க்கமுடியும் எனவும் பரந்தளவிலான பொருளாதாரதச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உண்மையான சமவாய்ப்புள்ள சமூக பொருளாதார சந்தையை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்மயருடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை மேற்கொண்ட பின், நடாத்திய இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.