நேபாளம் முழுவதும் சீன எதிர்ப்புப் போராட்டம்

அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார இருப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அணுகுமுறைகள் மற்றும் அழுத்தத்தை  சீனா தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நேபாளிகள் நாடு முழுவதும் நடத்தி தெருக்களில் இறங்கத் தொடங்கியுள்ளனர்.

அனைத்து துறைகளிலும் மூலோபாய சாம்ராஜ்யத்திலும் தனது பங்கின் மூலம் நேபாளத்தில் தடம் பதிக்க முயற்சிக்கும் சீனாவின் சதியை கண்டித்து, பல சமூக அமைப்புகள் நாட்டில் எதிர்ப்பு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன.

2019 இல் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் வருகையின் போது நேபாளம் நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருந்து நிலத்துடன் இணைக்கப்பட்ட நாடாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், நேபாளம் சீனப் பகுதி வழியாக தனது போக்குவரத்து உரிமையைப் பயன்படுத்த முடியும் எனவும் நேபாளத்தின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், நேபாள வணிகர்கள் எல்லையோர சீன சந்தைகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியாததால் ஒப்பந்தம் வெறும் காகிதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைச் சோதனைச் சாவடிகளைத் தடுப்பது மட்டுமின்றி, மிலேனியம் சேலஞ்ச் கூட்டுத்தாபனத்தில் வம்புகளை உருவாக்கி, அமெரிக்காவுடனான நேபாளத்தின் உறவைக் கெடுக்க சீனா முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேபாள சமூக அமைப்பான நேபாள ஜனநாயக கூட்டணி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், சீனா தனது உளவுப் பிரிவான மாநில பாதுகாப்பு அமைச்சு மூலம் நேபாளத்தின் இறையாண்மையைத் தாக்கும் வகையில் பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அமெரிக்காவின் மிலேனியம் சேலஞ்ச் கூட்டுத்தாபன மானியத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

நேபாளி காங்கிரஸ் தலைவரும் அறிவுஜீவியுமான சபுர் லால் சாஹு, சீன நிறுவனங்கள், சீனாவில் இருந்து தொழிலாளர்களை மாதேஸுக்கு வரவழைத்து நேபாளத் தொழிலாளர்களைச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, அரசியல் தலையீட்டின் மற்றொரு நிகழ்வாகக் கூறப்படும் வகையில், மாவோயிஸ்ட் தலைவர் பர்சாமான் பன் உடனான சந்திப்பின் போது, ​​ஷென்செனில் உள்ள சீன பிரதி அமைச்சர் சென் ஜாவோ, நேபாள கம்யூனிஸ்ட் சக்திகளிடையே இடதுசாரி ஒற்றுமையை வலியுறுத்தினார்.

சந்திப்பின் போது, ​​பிரசாந்தாவின் தலைமையில் மாவோயிஸ்டுகள் மேலும் வலுப்பெறுவார்கள் என்றும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் ஆகியவை நெருங்கிய நண்பர்கள் என்றும், எதிர்வரும் நாட்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.