பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் ??

பிரபாகரனின் உடலை பார்ப்பதற்கு கருணாவை அனுப்பியது யார் தெரியுமா??

‘இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காண நான் தான் கருணாவினை அனுப்பிவைத்தேன்’ என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
”அப்போது நாட்டின் சனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் வெளிநாட்டில் இருந்தார்கள். அந்தப் போர் முடிவடையும் என்று நாங்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் எங்களுக்கு வந்துகொண்டே இருந்தன. பிரபாகரன் அவர்களை உயிருடன் காப்பாற்றி கப்பல்மூலமாவது கொண்டுவரவேண்டும் என்ற தேவை பலருக்கு இருந்தது. பலர் அதை விரும்பினர். ஆனால் 18 ஆம் திகதியே போர் முடிந்துவிட்டது.

அப்போது எனது பிரதி அமைச்சராக கருணா அம்மான் இருந்தார். பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்ததும் அவரை அடையாளம் காண நான்தான் எனது பிரதி அமைச்சராக இருந்த கருணா அம்மானை அனுப்பி வைத்தேன். கருணா அவரை அடையாளம் கண்டு நேரடியாகவே பாராளுமன்றத்திற்கு வந்தார். யுத்தம் முடிவடைந்ததும் நான்தான் பாராளுமன்றத்தின் முதல் பேச்சாளராக இருந்தேன். அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா அமைச்சரவையில் ஒரு பெரிய ஒற்றுமை இருந்தது. அந்த ஒற்றுமை தான் யுத்தத்தில் நாங்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்தது.” என்று அவர் அந்த சிங்கள ஊடகத்திடம் மேலும் குறிப்பிட்டார்.