ZOOM வழியான கலந்துரையாடல் !


Note-,இந்த நிகழ்வில் நேரடியாக கலந்து , கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்! Zoom இணைப்பு விபரங்களை அனுப்பித் தருகிறோம்!
Author: தனுஜா சிங்கம்
Editor: ஷோபா சக்தி
“ஆண் குழந்தையாகப் பிறந்து ‘தனுஜன்’ என்ற பெயரில் வளர்ந்துகொண்டிருந்த எனக்கு, இப்போது பெயர் தனுஜா”……..
“இப்போது எனக்கு இருபத்தொன்பது வயதாகிறது. என்னுடைய பன்னிரண்டாவது வயதிலிருந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் என்னுடைய மனது தமிழ் நிலத்திலேயே வேரூன்றியிருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு மூன்று மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும். எனினும் என்னுடைய சுயசரிதையை முதலாவதாக என்னுடைய தாய்மொழியிலேயே எழுதுகிறேன்”. ………….
” இச்சிறிய வயதுக்குள், நான் நான்கைந்து ஜென்மங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்துவிட்டேன். இன்பத்தின் எல்லையையும் துன்பத்தின் விளிம்பையும் பார்த்துவிட்டேன்”. ……….
ஈழத்தில் பிறந்த திருநங்கைகளிலேயே, முதன்முதலாகச் சுயசரிதையை எழுதி நூலாக வெளியிடும் வாய்ப்பும் சூழலும் எனக்கே கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையிலிருந்தும் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது இருக்குமில்லையா! சமுத்திரத்தில் ஆயிரம் விசித்திரங்களும் மச்சங்களுமிருந்தாலும், அங்கிருந்து கிடைக்கும் உப்புக் கல்லுக்கும் பயனிருக்கிறதல்லவா! “……………
உரைகள்-

  • எழுத்தாளர்- இமையம் ( தமிழகம்)
  • ஆய்வாளர் -காமாட்சி ( தமிழகம்)
  • நூலாசிரியை- தனுஜா சிங்கம்
    இதுவரை இந்த நூலினை வாசித்த
    இன்னும் பல வாசகர், வாசகிகள்…….
    வழிப்படுத்தல்- எம்.பௌசர்
    ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES (ACT)
    முக நூல் வழியாக, நேரடி ஒளிபரப்பில் இந்த நிகழ்வினை பார்க்கலாம் ! உங்கள் முக நூல் வழியாக இந்த அழைப்பினை பகிர்ந்து கொள்ளுங்கள்!