மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.

21 பெப்ரவரி.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சியின் குறியீடான “மல்கம் எக்ஸ்” இன் நினைவு தினம்.
*
கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்லுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மல்கம் எக்ஸ் இதே நாளில் (1965) மேடையில் வைத்து கொடுரமான முறையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப்பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல் முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.அவர் இன்னும் கொஞ்சக் காலமாவது வாழ்ந்திருக்கக்கூடாதா என கறுப்பின மக்கள் ஒவ்வொருவரும் ஏங்கினர். கதறி அழுதனர்.

(“மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்சியாக கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். தமது கட்சியை மன்னிலைப்படுத்தாது அந்த மக்களுடன் மக்களாக இணைந்து போராட்டத்தில் ஈடபட்டுவருகின்றனர். அங்கிருந்து எமது நிருபருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில்: குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் படி வழங்கப்பட்ட காணிகளில் 83 குடும்பங்கள் வசித்து வந்ததாக கேப்பாபுலவு பிலகுடியிருப்பில் வசித்த மக்கள் தெரிவித்தனர். தமது காணிகளை விடுவிக்குமாற கோரி போராடிவரும் இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(“கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

“என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார்.

(““அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

என்மனவலையிலிருந்து………..

(சாகரன்)

1987 மாகாண அரசும் இன்றைய மாகாண அரசும்

பலரும் இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக பேசியும் வரிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் மகாணசபையும் இதற்கான பதவிகளும் 1987 புலிகள் உட்பட சகல அமைப்புக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று போர் நிறுத்தம் செய்து ஆயுத ஒப்படைப்பும் செய்தனர். இதில் புலிகளே இந்திய இராணுவத்தை நிறைகுடம் வைத்து வரவேற்று அவர்களின் இராணுவ வாகனத்தில் புலிக் கொடியையும் இந்தியக் கொடியையும் கட்டிக்கொண்டு ஊர்வலமும் நடத்தினர். இந்திய அரசும் மற்றய விடுதலை அமைப்புக்களை அதிகம் கண்டு கொள்ளவில்லை. மாற்று அமைப்புக்களின் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை ஈழத்தில் அனுமதித்ததில் உடன்பாடற்று இருந்த புலிகளின் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதல்களை வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆரம்பித்தனர்.

(“என்மனவலையிலிருந்து………..” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது.

(“வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

அம்பாறை உடும்பன்குள படுகொலை

19.2.1986 அன்று அம்பாறை உடும்பன்குளத்தில் இனவெறியர்களால் பெண்கள் குழந்தைகள் என 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 31ம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். ஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர் . இந்தவகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்க மாகாணம் கண்டிருக்கிறது. இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.

(“அம்பாறை உடும்பன்குள படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

தாழும் கப்பல் கரைசேராது

(கே.எல்.ரி.யுதாஜித்)
“யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற  ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா  காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரன் தெரிவித்தார்.

(“தாழும் கப்பல் கரைசேராது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 105 )

1988 டிசம்பரில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார்.எனது திருமணம் 1989 ஜனவரியில் நடந்தது.இந்த திருமணம் மகரகம அண்மித்த கொடிகமுவ என்னும் கிராமத்தில் நடந்தது.இதன் பின் நான்,மனைவி, மாமனார் குடும்பம் எல்லோரும் அந்த வீட்டில் வாழ்ந்தோம்.அயலவர்களான சிங்கள மக்கள் எந்த பிரச்சினைகளும் தரவில்லை.

(“பற்குணம் (பகுதி 105 )” தொடர்ந்து வாசிக்க…)

மாடேறி மிதிக்கும் கதை

(முகம்மது தம்பி மரைக்கார்)

வசதி வாய்ப்புகளோடு இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும், கண்ணீர்க் கதைகளும் உள்ளன. ஒரு கால கட்டத்தில் பணக்காரர்களாகவும் வாகனங்களோடும் இருந்தவர்கள், அனைத்தையும் இழந்து நிற்கின்றமையினைக் காண்பது கவலையளிக்கும் விடயமாகும்.இந்நிலைமை, தங்கள் சகாக்கள் சிலருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார் பஸ் உரிமையாளரான எம்.எஸ். பைறூஸ்.

(“மாடேறி மிதிக்கும் கதை” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழருக்கான அரசியல் தீர்வு ஏற்படுமா…?

இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரால் நூறு வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப்பட்ட நாடுகள். சுதந்திரம் கிடைத்தாலும் இந்த நாடுகளை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இன்று விரும்புகிறது. இலங்கையில் தமிழர்-சிங்களவர் பிரச்சனை, இந்தியாவில், முஸ்லிம்-இந்து பிரச்சனை என்பன யாவும் வெளியாட்களால் இயக்காப்படும் செயல்பாடுகள். 1971இல் பங்களாதேஷ் பிறந்ததையடுத்து பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டதும் அமெரிக்க நவீன ஆயுதங்கள் அனைத்தும் சோவியத் ஆயதங்களின் முன்னால் சுருண்டு போனதும் இந்த யுத்தத்தில்தான்.

(“இலங்கை தமிழருக்கான அரசியல் தீர்வு ஏற்படுமா…?” தொடர்ந்து வாசிக்க…)