கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம்,

(ரி. தர்மேந்திரன்

பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார்.

(“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம்,” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?

(நீரை.மகேந்திரன்)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியதும் அரசியலில் கணிக்க முடியா குழப்பம் உருவாகிவிட்டது. எம்ஜிஆர் நினைவு நாளை அனுசரிக்க வெற்றிமாலையோடு யார் செல்வார்கள் என்று இன்று காலை வரை நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் அதிமுகவில் அடுத்த கட்ட போக்குகள் எப்படி இருக்கும், அதிமுக ஆட்சியில் நிலைத்தன்மை இருக்குமா என்பதற்கான கேள்விகளுக்கு இப்போது முடிவு கிடைக்கப் போவதில்லை. டிடிவி தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் என்று அரசியல் நோக்கர்களாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. வெற்றி வெற்றிதான் வேறொன்றும் சொல்வதிற்கில்லை.

(“ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கவிஞர் சுபத்திரன்

(தோழர் ஜேம்ஸ்)
 
(சம உரிமை இயக்கம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் வழமை போல் இவ்வருடமும் கனடாவில் டிசம்பர் 22 மாலை 6 மணிக்கு ரொரன்ரோவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிஞர் சுபத்திரனின் கவிதைகளில் சிலவற்றை தேர்தெடுத்து அவற்றின் சில பகுதிகளை இணைத்து இசையமைத்து பாடலாக பாடுகின்றனர். இந்த நிகழ்விற்கு கவிஞர் சுபத்திரன் பற்றிய என் முகவுரை. இதனைத் தயாரிப்பதற்கு எனக்கு தகவல்கள் தந்துதவிய தோழர் மணியம் அவர்களுக்கு எனது நன்றிகள்)

(“தோழர் கவிஞர் சுபத்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

தேரரின் மரணம்

மச்சிகளே, குட்டிகளே,
உங்க boy friend, girl friend, மனுசன், மனுசியோட பிரச்சனை எண்டால் முகநூலாலா வந்து நியாயம் கேட்கிறீர்கள்?
இரகசியமா கெஞ்சித்தானே நியாயம் கேட்கிறியள்! இதையேன் சகோதர சிங்கள முஸ்லீம் பிரச்சனையின்போதும் செய்யக்கூடாது? முத்தவெளியில தேரரின் உடல் எரிக்கப்படுவதை யாழ் விகாரையில் நேரே கதைத்துப்பார்க்கலாம் தானே? உங்களில் எத்தினைபேருக்கு 1987 ல் லெப்.கேணல் விக்டர் கொல்லப்பட்ட சமரில் கைப்பற்றப்பட்ட 13 இராணுவத்தினரின் அழுகிய சடலங்களை கிட்டு நல்லூர் கோவில் வீதியில் கண்காட்சிக்கு வைத்தது தெரியும்?

(“தேரரின் மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையர்களுக்கு அடித்த மகா யோகம்!நுவரேலியாவில் கிடைத்த அரிய பொக்கிஷம்!!

இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களாலேயே இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் அதிக மருத்துவ தேவையுடைய பழமாகக் கருதப்படும் பெப்பினோ மெலன் (Pepino melon) என்ற பழமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(“இலங்கையர்களுக்கு அடித்த மகா யோகம்!நுவரேலியாவில் கிடைத்த அரிய பொக்கிஷம்!!” தொடர்ந்து வாசிக்க…)

மாவையின் மகன் தேர்தலில் குதிக்கிறார்?

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்விக் கற்று வந்த கலையமுதன், தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்நிலையிலேயே, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம்: இடதுசாரிகளின் தருணம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்களின் விருப்பங்களுக்கு எல்லா வேளைகளிலும் தடை போடவியலாது. ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும் அதிகாரிகள் விரும்பாவிட்டாலும் அண்டைநாடுகள் விரும்பாவிட்டாலும் மக்களின் விருப்பத்துக்கு எதிரான போக்கு என்றென்றைக்குமானதல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டியதைப் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் சாம, பேத, தான, தண்ட ஆகிய அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் ‘மக்கள்தான் தீர்மானகரமான சக்தி’ என்ற விளாடிமிர் லெனினின் சொற்கள் புகழ்பெற்றவை. மக்கள் ஒரு செய்தியைச் சொல்ல விளைகின்றபோது, அது எப்போதும் வலுவான சக்தியாகவே இருக்கும்.

(“நேபாளம்: இடதுசாரிகளின் தருணம்” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

(“மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி

யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையை முன்னெடுத்த வைத்தியகுழுவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்

வெல்லவே முடியாத, அசகாய சூரர் என்று நரேந்திர மோடியைப் பற்றிய பிம்பம் உருவாக்கப்பட்டது குஜராத் என்ற உலைக்களத்தில்தான்; அவருடைய அரசியல் பாணியை ஏற்றுக்கொண்ட குஜராத் வாக்காளர்கள் தொடர்ந்து அவருக்கு பொதுத் தேர்தல்கள்தோறும் வாக்களித்தார்கள். பிரதமராவதற்காக 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் அபரிமிதமாக ஆதரித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவருக்கு அளித்துவந்த அந்த அமோக ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 99 இடங்களை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள். என்றாலும் ஆதரவு தொடர்கிறது!

(“குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்” தொடர்ந்து வாசிக்க…)