’இரட்டை குடியுரிமை தனி நபருகே பயனளிக்கும்’

இரட்டை குடியுரிமையுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு அல்லாமல் அந்த நபருக்கே பயனளிக்கும் என, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தனது விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை’ – மைத்திரி

தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார். ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம்.

முள்ளிக்கு நாமல் விஜயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

‘16 பேரில் ஒருவர்கூட கிழக்கில் இல்லை’

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 1,801 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கையானது 251,727ஆக அதிகரித்துள்ளது.

முதன்முறையாக செவ்வாய்க்கு ஆட்களை அனுப்பவுள்ள சீனா

செவ்வாய்க்கு முதன்முறையாக எதிர்வரும் 2033ஆம் ஆண்டு ஆட்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. தவிர, செவ்வாயில் நிரந்தரமாகத் தளம் ஒன்றை நிர்மாணிக்கவும், அதன் வளங்களை எடுக்கவும் நீண்ட காலத் திட்டம் ஒன்றின் கீழ் தொடர்ந்து விண்கலங்களை செவாய்க்கு சீனா அனுப்பவுள்ளது.

ஐம்பது நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு: ‘இந்திய ஒன்றியம்’ என்று கூறி பொறுப்பேற்ற பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள்

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்கள் பங்கீட்டில் இழுபறி, பாஜக பரிந்துரை செய்த பட்டியலில் மாற்றம், என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்வில் தாமதம் ஆகியவற்றால் அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி ஏற்பட்டது.

காலையில் மகாஜனாவின் முன்னாள் அதிபர் புலிகளால் கொலை!

மாலையில் மகாஜனாவின் பெயரில் கலாச்சார நிகழ்ச்சி!மகாஜனாக்கல்லுரியின் முன்னாள் அதிபர் திரு.க.நாகராஜா இன்று (07-10-2006) தெல்லிப்பழையில் வைத்து புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 1985 ஆண்டு மகாஜனாக்கல்லுரியின் அதிபராக பதவியேற்ற இவர், மகாஜனாக்கல்லுரியின் தற்போதைய அதிபர் திரு. சுந்தரலிங்கம் 1998 ஆண்டு மகாஜனாக்கல்லுரி அதிபராக பதவியேற்கும்வரை மகாஜனாக்கல்லுரியின் அதிபராகக் கடமையாற்றினார்.

மரண அறிவித்தல்

செபஸ்தியாம்பிள்ளை டேவிற் காலமாகிவிட்டார்


தோழர் மாவின்(Roy Danton) இன் தந்தையார் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், இலங்கையில் காலமாகிவிட்டார். ஏனைய விபரங்கள் தாதமாக அறிவிக்கின்றோம். அவரின் துயரச் செய்தியில் தமிழர் ஜனநாயகக் கட்சியினர்(SDPT) இணைந்து கொள்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் தோழர் மாவினும் அவரது குடும்பமும் மிகவும் நெருக்கமான பங்களிபை செய்தவர்கள். அவரின் தந்தையின் இழப்பு கவலைக்குரியது அவருக்கு ஆதரவாக ஆறுதலாக நாம் இருப்போம்.