13இன் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவ​தே காலத்தின் தேவை

ரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பின்னாலும் மற்றுமொன்று இருக்கத்தான் செய்கிறது. அவற்றை உடனடியாக இனங்கண்டுகொண்டால் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களைக் நோக்கி நகரமுடியும். சில இனங்காணல்கள் காலங்கடந்த ஞானமாகவும் இருக்கக் கூடும்.

வடக்கின் புதிய ஆளுநராகிறார் ஜீவன்?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையொப்பமிட்டு ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.   தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை விரைவில் அவர் இராஜினமா செய்வார் என்றும் அறிய முடிகிறது. 

தமிழர்களின் பொருளாதார மீட்சி

(என்.கே. அஷோக்பரன்)

தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். 

5 தசாப்தங்களின் பின் சர்வதேச விமான சேவை

5 தசாப்தங்களுக்குப் பின்னர், பிராந்திய சர்வதேச விமான சேவைகளை இரத்மலானை விமான நிலையம் தொடங்க உள்ளது என்றும் முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுகளுக்கு புறப்படும் என்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவியன் எயார்லைன்ஸுடன் இடம்பெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் தொடங்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானும் தலிபான்கள் வசமாகுமா? போராளிகள் மத்தியில் நிலவும் துடிப்பு

பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது.  ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.

தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

திருகோணமலை குச்சவெளி வசந்த் தோழர் சந்திரன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று (06) அறிவிக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் மெக்மிலன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?….

நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆயுவு கட்டுரையில் தெரிவிக்கிறது. இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian – சுயநலத்தின் கலாச்சாரம்.
இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.

மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி

மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41,262 மாணவர்களில், 30,812 பேர் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர். இந்தப் பெறுபேறுகளின் வீதம் 74.67 அதிகரித்துள்ளது  என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராட்டத்து ஆசிரியர்கள் முஸ்தீபு

ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, மாபெரும் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 312 பிரதேச கல்வி அலுவலகங்களின் அடிப்படையில், இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த இடையூறுகள் வந்தாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அவர் கூறினார்.