நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.

மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம்
ஆனையிறவு தாக்குதல் விடையாக திரிவுபடுத்துதல் தகவல்கள் வருவதால் பல நண்பர்கள் என்னிடம் ஒரு பதிவை இடும் படி வேண்டியதால் இதை எழுதுகின்றேன். பொதுவாக நாங்கள் பரந்தன் பகுதியை கைப்பற்றிய போதே ஆனையிறவையும் கைப்பற்ற வேண்டும் என்பது திட்டமாக இருந்தது இதற்காக ஒரு படைத்தொகுதியை சுண்டிக்குளம் பகுதியால் இறக்கி பின்பக்கமாக ஆனையிறவை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது இதை நானே தலமைதாங்கினேன் திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

(“நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.” தொடர்ந்து வாசிக்க…)

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்

“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

தலைவனுக்கொரு மடல்…!

(எஸ். ஹமீத்.)

என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே…!

அஸ்ஸலாமு அலைக்கும்!

விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெண்ணித் துடித்துத்தான் போகிறேன் தலைவா…!
தங்கமென நாம் நினைத்திருந்த தலைவன் ஒரு துருப்பிடித்த தகரமென அறிந்து கொண்டதனால் ஏற்பட்ட அக வலியை ஆற்றுப்படுத்த வழியற்றிந்தக் கடிதத்தையுந்தன் கண்களுக்கும் கல்புக்கும் சமர்ப்பிக்கின்றேன் தலைவா…!

(“தலைவனுக்கொரு மடல்…!” தொடர்ந்து வாசிக்க…)

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு பிரசன்னாவும், சினேகாவும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இதன் மூலம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

(“நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி

குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தியிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில் 21 சதவீத தலித் மக்கள் இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் மத்தியில் உனா எழுச்சி எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லையா?

(“தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி” தொடர்ந்து வாசிக்க…)

இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?

எம் தேசத்து மன்னர் ஆட்சி முறைமை அன்னியர் வரவால் அகன்று, போத்துக்கேயரும் அவர் தடம் அறிந்து வந்த ஒல்லாந்தரும் ஆண்ட பின், ஆங்கிலேயர் எம் முழு தேசத்தையும் ஆக்கிரமித்தனர். ஆட்சி இலகுவிற்காக மாகாணங்களாக எம் தேசம், கொழும்பை தலைநகராக கொண்ட ஆளுமைக்கு உட்பட்டது. இரண்டாம் உலக போரின் பின் அது சிங்கள தலைமைகளிடம் கையளிக்கப்பட்டது.

(“இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?” தொடர்ந்து வாசிக்க…)

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு

வடக்கு – கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

(“தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?

தமிழ்-சிங்கள புதுவருடமான 14.04.2017 அன்று கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பிரதேசமான மீதொட்டமுல்லயில் திண்மக்கழிவு (குப்பை) மேடு சரிந்ததில், அதனைச்சூழ இருந்த 147 வீடுகள் புதையுண்டு, மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 சடலங்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 20 பேராவது புதையுண்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வேறு இடங்களிலிருந்து வந்த மக்களும் அங்கு கூடியிருந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கையினைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதாகத் தெரியவருகின்றது. உலகெங்கிலும் அடிக்கடி மண்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதுபற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் திண்மக்கழிவு மேடு சரிந்து இவ்வளவு தொகையாக மக்கள் இறந்தது முதன்முறையாக இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

(“இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?” தொடர்ந்து வாசிக்க…)

மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!

எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.

(“மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!” தொடர்ந்து வாசிக்க…)

டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஒரு மிக மோசமான மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவியல் நிபுணர்கல் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமேரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு உலகமும் ஆடிப் போயுள்ளது.

(“டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!” தொடர்ந்து வாசிக்க…)