வடக்கும் கிழக்கும் இணைவது

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

(“வடக்கும் கிழக்கும் இணைவது” தொடர்ந்து வாசிக்க…)

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்……

கடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைநிலையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாகாண சபையின் செயற்பாடுகளை பயனுள்ள விதத்தில் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

(“யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்……” தொடர்ந்து வாசிக்க…)

சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …!!

(Subakaran Mayilvaganam)

 

“எழுக தமிழ்” யாழில்(24-09.2016) நடைபெற்றது, அது தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி என்று புலம்புகின்றனர். ஆனால், இதை பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் …!! இந்த எழுக தமிழை ஏற்பாடு செய்தவர்கள் TPC அமைப்பு. அந்த அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களோ, இலங்கை அரசிடம் இருந்து வாழ்க்கை முழுவது வருமானம் பெறும் திடத்தில் இருப்பவர்கள். மிகவும் பணக்காரர். நாளைய உணவிற்கு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.

(“சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …!!” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!

மிகுந்த தயாரிப்புகள், அறிவிப்புகள், கோரிக்கைகள், பத்திரிகை ஆசிரியதலையங்கம் என ஆர்ப்பரித்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி பற்றி, சங்கூதும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், எழுக தமிழ் பேரணி சிங்கள தலைவர்களை மேலும் கலங்க வைக்கப்போவது திண்ணம். யாழில் 3000 ஆயிரம் பேர் கூடிய எழுக தமிழ் நிகழ்ச்சியால் சிங்கள அரசு ஆட்டம் கண்டுள்ளது, என தற்பெருமை பேசிய வேளை தென்னிலங்கை பத்திரிகை செய்தி அதை மறுதலித்தது.

(“எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் : ராஜன் ஹூல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.

கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை

(கருணாகரன்)

விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

(“கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை” தொடர்ந்து வாசிக்க…)

‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு

“எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

(“‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!

(SM சபீஸ்)

வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

(“முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!” தொடர்ந்து வாசிக்க…)

சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்

 

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)