உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கம்பெனியின் ஓய்வு அறைக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி அந்த அறையின் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் சத்தம் போடாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள்,பசி தாங்க முடியாமல்,ஓய்வு அறைக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.அவர்,அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது,யாருமே கண்டு கொள்ளவில்லை.

(“உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையில் இலங்கை தமிழ் அகதிகள் அமைதி பேரணி

 

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.srilankan-refugee-protest

சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலர் ஞானராஜ்,

‘முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, இந்தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாவைத் தண்டப்பணமாகவும், நுழைவிசைவுக் கட்டணமாக 13,500 ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் இதற்காக இலட்சக்கணக்கான ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நாடு திரும்புவதற்கு விரும்பும் பலர், தண்டப்பணம் செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

யாரோ செய்த தவறுகளுக்காக சிலுவை சுமந்த சுதா……!

இந்திய அமைதிப் படை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறத் தொடங்கிய ஆரம்ப நாள் (1989) அது. ஒரு நாள் பிற்பகலில் கதுருவெல யிலிருந்து காத்தான்குடிக்குப் போவதற்காக மட்டக்களப்பு வரை செல்கின்ற இபோச பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். செங்கலடி சந்திக்கு சமீபமாக ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சிலரால் நான் வந்த பஸ் வழிமறிக்கப்பட்டது. மூன்று ஆயுத தாரிகள் பஸ் உள்ளே வந்து “சோனிக் காக்காமார் யாரும் இரிக்கிறீங்களாடா? இரிந்தா இறங்கிடா எல்லாரும்” என்று கூறிக்கொண்டு சந்தேகமானவர்களிடம் அடையாள அட்டையை கேட்டு பெயர்களை பரிசோதித்தார்கள்.

(“யாரோ செய்த தவறுகளுக்காக சிலுவை சுமந்த சுதா……!” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி??

அண்மையில் கபாலி திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். தேவையற்ற நிகழ்வுகளுக்காக நாம் அளவுக்கதிகமாக பரபரப்பை உண்டாக்குகிறோம், அதில் நாமும் பங்கேற்கிறோம் என்கிற குற்ற உணர்வையே இப்படம் நாளடைவில் எமக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. கபாலி திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததால் ஒரு மாபெரும் நிகழ்வாக பார்க்கப்பட்டது. கதை கேட்டு வளர்ந்த தமிழகத்தில், உச்ச நடிகரான ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பு இயல்பானதே!

(“விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி??” தொடர்ந்து வாசிக்க…)

கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண்- கலைச்செல்வி

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ‘ எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா’ எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

(“கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண்- கலைச்செல்வி” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை

மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. ‘பசிக்கு எதிரான செயற்பாடு’ அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

(“தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து. ஒரு நாட்டின் மொத்த‌ பொருளாதார‌ உற்ப‌த்தி (GDP) மொத்த‌ க‌ட‌ன்க‌ளை விட‌ குறைவாக‌ இருந்தால், பொருளாதார‌ தேக்க‌ம் உண்டாகும். இதுவே கிரேக்க‌ நாட்டிலும் ந‌ட‌ந்த‌து. இல‌ங்கையின் த‌ற்போதைய‌ நில‌வ‌ர‌ப் ப‌டி GDP தொகை: US$ 75 பில்லிய‌ன் டாலர். ஆனால், மொத்த‌ க‌ட‌ன் தொகை $81 பில்லிய‌ன் டால‌ர். அதாவது உற்ப‌த்தியை விட‌ க‌ட‌ன் அதிக‌ம். அத‌னால், அர‌சின் வ‌ருமான‌த்தின் 94% க‌ட‌னைக் க‌ட்டுவ‌த‌ற்கே செல‌விட‌ப் ப‌டுகின்ற‌து.

(“இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் மறு எழுச்சியா?

‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

(“மஹிந்தவின் மறு எழுச்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..

ஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

(“ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.” தொடர்ந்து வாசிக்க…)

புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புப் பற்றி உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“புலி பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார். உதயகுமார் கூறிய தகவலால் யாழில் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)