தமிழ்நாடு தேர்தல் முடிவு

இதுவரை வெளிவந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் அதிமுக தனிப் பெரும் கட்சியாக பெரும்பான்மை பெறும் நிலைகள் எற்படும் போல் தோன்றுகின்றது. இது நான் எதிர்பார்த்த யாரும் அறுதிப் பெரும்பான்மை பெற மாட்டார்கள் என்ற கணிப்பை மாற்றியுள்ளதாக அமைகின்றது. விஜயகாந்த் தலமையிலான முற்போக்கு கூட்டணி நான் எதிர்பார்ததைப் போல் மூன்றாவது பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கவில்லை என்பது எனது தேர்தல் முடிவுகள் பிழைப்பதற்கு முக்கிய காரணியாக அமையப் போகின்றது என்பதை இதுவரை வந்த தேர்தல் முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன. அதிமுக ஆட்சியமைப்பது ஜேயலலிதாவின் எதேச்சாகாரத்திற்கே வழிவகிக்கும் என்பதே மீண்டும் என்கருத்தாக அமைகின்றது. இது தமிழநாட்டு மக்களுக்கு நல்லது அல்ல

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 123
திமுக கூட்டணி 81
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 04
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 115
திமுக கூட்டணி 79
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 04
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00

அசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா முன்னணி

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதில், அசாமில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. அசாமில் 126 தொகுதிகளில் 51-ன் வாக்கு வித்தியாசங்கள் வெளியாகி உள்ளது. இங்கு ஏற்பட்ட மும்முனை போட்டியில் பாஜக 30 இடங்களில் முன்னணி வகிக்கிறது. தொடர்ந்து மூன்று முறை அசாமில் பதவி வகித்த காங்கிரஸ் 12 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பத்ருத்தீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய முன்னணி 6 மற்றும் இதர கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

(“அசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா முன்னணி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக திமுக விட 20 தொகுதிகளில் முன்னலை வகிக்கின்றது. திமுக அதிமுக இரு கட்சிகளும் ஒரே மாதிரியான செயற்பாடடையே கொண்டிருந்தாலும் இம்முறை ஜெயலலிதா வெல்லுவாராக இருந்தால் இவரின் ஏதேச்சாகார நடவடிக்கைகள் தொடரும் இவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீரப்புகள் எல்லாம் உண்மையில் பொய் என்றாகிவிடும். இனிவரும் காலங்களில் கருணாநிதி இல்லாத தேர்தலே நடைபெறும் இதில் முக. ஸ்ராலின் தாக்கு பிடிப்பது ஜெயலலிதாவின் பிரசன்ன காலத்தில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். ஏனைய கட்சிகளின் எதிர் காலங்கள் மேலும் கேள்விக்குறியாகி நிற்கும். திமுக இன் குடும்ப ஊழல் ஆட்சியை மக்கள் மறக்க பல காலம் எடுக்கும் என்பதை எடுத்துக் காட்டும் தேர்தல் முடிவாக அமையலாம். அம்மாவின் வறிய மக்களுக்கான தினசரிப் பிரசனையில் வழங்கும் அம்மா சாப்பாட்டுக்ககடை போன்ற விடயங்கள் மக்களை அதிகம் கவரந்ததாக பொருள்படும். திமுக இன் நீண்ட காலப் பிரசனையை நோக்கிய அணுகு முறைக்கு விழுந்த அடியாக அமையும.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

கூட்டணி வாரியாக – முடிவுகள்

தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 99
திமுக கூட்டணி 79
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 00
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00

தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்

திராவிடக் கட்சிகள் பிரமுகர் கட்சிகளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். ஆனால் காரியம் ஏதும் ஆகவேண்டும் என்றால் இவர்களையே பிடித்தாகவேண்டும். இதில் பெரியார் வழி வந்த தி.க. உறுப்பினர்கள் பலர் கொள்கைப் பிடிப்புடன் இன்றுவரை செயற்படுகின்றார்கள். இவர்களின் பல திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். தாலி கட்டமாட்டார்கள். மதச் சடங்குள் ஏதும் செய்யமாட்டார்கள். தி.க. வில் உள்ள ஒரு தலைவர் முன்னிலையில் மாலையை மட்டும் மாற்றிக் கொள்வார்கள். திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் பற்றி திருமணவிழாவிற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்துரை மாதிரியான முற்போக்கு கருத்துக்களைத் தெரிவித்து பேசுவார்கள். புது வாழ்வை ஆரம்பிப்பவரகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள். வேலை வாய்பு வீடு அமைப்பது அல்லது குறைந்த வாடகைக்கு பிடித்துக் கொடுத்தல் போன்றவை. எங்களையும் மிகவும் மரியாதையுடன் தோழமையுடன் நடாத்துவார்கள்.

(“தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலையிலும் அதிமுக கூட்டணி இதற்கு பின்னால் அடுத்த நிலையிலும் இருக்கின்றன. மற்ற கட்சிகள் இதுவரை எந்h ஒரு தொகுதிலும் முன்னிலை வகிக்கவில்லைசில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தேர்தல் பற்றி வெளியிட்டிருந்த எனது தேர்தல் கணிப்பு அனேகம் சரியாக அமையலாம் என்றே இதுவரை முடிவுகள் தெரிவிக்கின்றன.
1978 களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு காரணங்களுக்காக ஆகக் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும் சென்று வருகின்றேன். பல தரப்பட்ட அரசியல் பின்னணியை உடையர்வர்கள் எனது நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர். எல்லோரும் ஒரு குரலில் கூறும் விடயம் ‘…இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுத்த மோசம் எங்கே மக்களைப்பற்றி யோசிக்கின்றார்கள் திருடர்கள் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களின் ஓரே நோக்கம்…’ என்று. நான் திருப்பி கேட்பேன் அப்போ ஏன் திரும்ப திரும்ப இவர்களையே தெரிவு செய்கின்றீர்கள் என்று. அவர்களின் பண பலத்திற்கு முன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள். காமராசர் போன்ற ஒருவர் அல்லது திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், போல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பார்கள். ஆனால் கடந்த 40 வருடங்களாக தமிழ்நாட்டு மக்கள் இந்த திராவிடக் கட்சிகளிடம் மட்டுமே சரணடைந்து கிடக்கின்றனர்.

(சாகரன்)

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

கூட்டணி வாரியாக – முடிவுகள்

தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்

முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி 37
திமுக கூட்டணி 41
தேமுதிக – ம.ந.கூ 00
பாமக 00
பாஜக கூட்டணி 00
நாம் தமிழர் 00

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

கூட்டணி வாரியாக – முடிவுகள்
தேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118

அணிகள்                      முன்னிலை / வெற்றி

அதிமுக கூட்டணி:     25

திமுக கூட்டணி:         26

தேமுதிக – ம.ந.கூ:     00

பாமக:                           00

பாஜக கூட்டணி:         00

நாம் தமிழர்:                00