பயிரை மேய்ந்த வேலிகள்..(21)

(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்!)

நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே ஆடிக்கொண்டிருந்தார். நாள் முழுதும் பங்கர் வெட்டுவதற்க்கு விட்டப்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளும் அதனை தொடருமாறு கூறப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் வரை தொடர்ந்த பங்கர் வெட்டும் பணி முடிவடைந்தது. அந்த பங்கர்கள் பயிற்சியின் போது இடம்பெறக்கூடிய விமானத்தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்களுக்காவே அமைக்கப்பட்டது என உணரத்தொடங்கினர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(21)” தொடர்ந்து வாசிக்க…)

புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!

(சாகரன்)

பொதுவாக புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் பொது அமைப்புகள் நடாத்தும் கொண்டாட்டங்கள் களியாட்டங்களுக்கு போகும் பழக்கங்களை கொண்டவன் அல்ல நான். காரணம் இவை பெரும்பாலும் புலிப்பினாமிகளால் நடாத்தப்படுபவை என்பதினால். மேலும் இவற்றின் முழுநோக்கமூம் உண்டியல் குலுக்கி இதில் சேரும் பணத்தை ஆயுதம் வாங்க இதனைப் பயன்படுத்துவதும் அன்றேல் தேசியத்தை கூறிக்கொண்டு தனிநபர்கள் அல்லது தமது கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள தனி நிறுவனங்களில் கணக்கில் இவற்றை வைப்பிலிடுவதும் ஆகும். இதனை நடாத்துபவர்கள் தமது வாழ்நாள் சாதனையாக வேலை செய்யாமல் வாழுவதை உறுதிப்படுத்தவுமே இந்த கலக்ஷன் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும் காரணம் ஆகும். இதற்கு அவர்கள் பாவிக்கும் சொற்பதங்கள் தமிழர்களின் கலை கலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்க விழா எடுக்கின்றோம்; அல்லது தமிழரின் அடையாளங்களை நிலை நிறுத்துகின்றோம் என்று தம்மை மீட்போராக காட்டுவதும் அல்லது தேசியம் என்று இதன் அர்த்தம் விளங்காமல் பாவிப்பதும்; ஆகும்.

(“புலம் பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாட்டங்களும்….! களியாட்டங்களும்…..!” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(20)

(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)

2006 ஜூன்/ ஜூலை மாதங்களில்மண்வெட்டி பிடிகளுடன்தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கானமுதலுதவி மற்றும் தலைமைத்துவஉடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால்மண்வெட்டி பிடிகளுக்குபதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்சியாக மாறியிருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(20)” தொடர்ந்து வாசிக்க…)

ஐயரும் ஆட்டுக்குட்டியும்

ஒரு இருண்டகாலத்தில், எழுத்துசுதந்திரம் மறுக்கப்படட காலத்தில், துப்பாக்கி எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என எல்லோரும் நம்பிய காலத்தினுள் நாம் சில தொகுப்புகளைக் கொண்டுவந்திருந்தோம், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த எனது நண்பர் , ‘சில தன்னார்வ அமைப்புகள் தமிழில் வெளிவந்த தொகுப்புகளை ஆவணப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன, உங்கள் தொகுப்புகளை அவற்றிற்கு அனுப்பிவையுங்கள்’ என நூலகம் அமைப்பினரது பெயரை எனக்குப் பரிந்துரை செய்தார், நூலகம் அமைப்பினருடன் தொடர்புகொள்ள முயன்றபோது எனக்கு இப்படி ஒரு பதில் வந்தது, நான் அதிர்ச்சியடையவில்லை, நிறையப் பார்த்து விட்டோம் ரொம்பவும் !

(“ஐயரும் ஆட்டுக்குட்டியும்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(19)

(மாணவர்களை நெருங்கிய காலன்)

2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் போர் பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு பயிற்சியை பெற்றுக்கொள்ள விருமபாதவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதே சிரமம் என்கின்ற நிலையை புலிகள் உருவாக்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(19)” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், பங்களாதேஷ் பிரிவினைக்கும் தொடர்பிருக்கிறது. அதாவது, தேசிய இனப் பிரச்சினைகளை அடக்கும் நோக்கில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பாதுகாப்புக் கவசம் தான் இஸ்லாமியவாதம்.

(“பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

புலி சின்னத்துடனும் பிரபாகரன் படத்துடனும் தாலி

அதுதானே பார்த்தன் எலி ஏன் அம்மணமா ஓடுதெண்டு. அப்பவே நினைச்சன் இப்படியான வேலையைச் செய்யிறது வேறு எந்த ஊராக இருக்கும்? அந்த ஊர்தான் கள்ளக் கடத்தலுக்குப் பேர்போனதும் நாட்டை அழித்த பயங்கரவாதி பிறந்த அந்த ஊர்க்கரனைத் தவிர வேறு யார் இப்படியான லூசுத்தனமான வேலையைச் செய்வார்கள்.

(“புலி சின்னத்துடனும் பிரபாகரன் படத்துடனும் தாலி” தொடர்ந்து வாசிக்க…)

சாதியும் பகுத்தறிவும்

பெரியாருக்குப் பின் தி.க அவை நடத்தியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினார்கள் .அவரகள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றார்கள்இதற்கு பல தாழ்த்தப்பட்டவர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.பலர் மௌனம் சாதித்தார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பிராமணர்களாக இருந்தனர்.ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாத் சாதிக்கு எதிரானவர் என்றால் அவர்களின் நம்பூதிரி என்ற சாதிப்பதத்தை எடுக்க முடியுமா என வரட்டுத்தனமான சவால்களை விட்டனர்.

(“சாதியும் பகுத்தறிவும்” தொடர்ந்து வாசிக்க…)

செல்வியின் வலிந்த மரணம் விட்டுச் சென்ற செய்திகள்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் மிதவாதத் தலமைகளின் கரங்களினால் உசுப்பேத்தப்பட்ட 1970 – 1980 காலங்களில் புஷ்பராணி அங்கயற்கண்ணி ஊர்மிளா கல்யாணி போன்றவர்கள் தமது அரசியல் வாழ்வை பொதுவெளியில் தமிழ் இளைஞர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். அப்போதெல்லாம் ஆண் ஆதிகம் மேலோங்கி இருந்த எம் சமுதாயம் இந்தப் பெண்களை விநோதமாக பார்த்தாலும் இவர்களின் பாதுகாப்பிற்கும் உயிர் வாழ்தலுக்குமான உறுதிப்பாட்டை பொது மக்களே செய்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்றால் குலம் அக்கா வேதநாயகம் குடும்பம் போன்றவர்களும் கண்ணாட்டியில் வாழந்த பல குடும்பங்களும் இந்தப் பெண் போராளிகளின் பாதுகாப்பை பொது மக்கள் உறுதிப்படுத்தியே இருந்தனர்.

(“செல்வியின் வலிந்த மரணம் விட்டுச் சென்ற செய்திகள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 69)

பற்குணம் இனவாத பிரச்சினக்கு முகம் கொடுத்ததால் அவர் இனி அடங்கி நடப்பார்.அடக்கி நடத்தலாம் என எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அவர் யாரையும் பற்றி கவலைப்படாமல் வழமையான போக்கில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 69)” தொடர்ந்து வாசிக்க…)