மீண்டும் கொரனாவிற்குள்…. உலகத்தின் இரண்டாவது சனத்தொகை நாடு இந்தியா

(சாகரன்)
டிசம்பர் நடுப்பகுதியில் சீனாவின் வூஹானில் முதலில் அறியப்பட்ட கொரனா வைரஸ் இது ஒரு சீன வைரஸ்… சீனா(மட்டும்)வைத் தாக்கும் சீனப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் செல்லும் இனி சீனாவின் கதி அதோ கதிதான் என்று சீனா மீதும் அந்த நாட்டு மக்கள் என்று அடையாளப்படுதப்பட்ட மக்கள், அவர்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் என்று பலவற்றிலும் ஒரு வகை வெறுப்புணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தொற்று நோய் பேரிடர் பற்றிய தொடக்கம்.

நோர்வேயில் ஜோர்ஜ் புளொயிட் இன் மரணத்திற்கு எதிரான போராட்டம்

(Thiagarajah Wijayendran)
ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற பெயருள்ள ஓர் அவ்ரோ அமெரிக்கர் வீதியில் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமான சம்பவம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று அவரை நினைவுகூர்ந்து ஒஸ்லோவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஐம்பது பேருடன் மட்டுமே நடக்கலாம் எனக் (கொரோனா தொற்றைத் தவிர்க்க) காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். வந்து கலந்துகொண்டோர் எண்ணிக்கை 14000வரை எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். எத்தனைபேர் வந்தாலும் அதில் நாம் தலையிட மாட்டோம் எனக் காவல்துறையினர் முன்கூட்டியே கூறியிருந்தனர். இத்தருணத்தில் சட்டம் ஒழுங்குதான் எமக்கு முக்கியம் - நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு அல்ல என விளக்கம் கூறப்பட்டிருந்தது.

மினிஆப்போலஸ்யை புரிந்துகொள்ளும் நாம், நிச்சாமத்தை புரிந்துகொள்ளத் தயாரில்லை!

(Thesam Net)
ஜனநாயகத்தின் காவலன், மனித உரிமைகளின் காவலன் என்ற வேசம் கலைக்கப்பட்டு நிர்வாணமாக நிற்கின்றது, அமெரிக்கா என்ற முன்னாள் வல்லரசு. அதேபோன்று தமிழ் சூழலில் இந்த நிறவாதத்திறகுச் சற்றிலும் குறையாத சாதிவாதம் பிரதேச வாதம் மதவாதம் இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. ஒடுக்கும் சாதியினரான கணிசமான பிரிவினர் முழுப் பூசணிக்காயை சோற்றினுள் மறைக்க முயன்றாலும் இவையெல்லாம் ஆங்காங்கே தலைக்காட்டியே வருகின்றது. பிரித்தானியாவில் உள்ள இனவாதம் போன்று வடக்கில் உள்ள சாதிவாதம் பிரதேசவாதம் மதவாதம் அனைத்தும் அங்குள்ள கட்டமைப்புகளினால் உள்வாங்கப்பட்டு அதுவே நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது.

அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன.

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் – மாளவிகா மோகனன்

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் என்று ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

இனவெறித் ’தீ’

(என்.கே. அஷோக்பரன்)

அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார்.

மே 26, 2020: மீண்டும் ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல்…..

(சாகரன்)
மே 26, 2020 ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல் என்ற சிந்தனை மீண்டும் அரங்கேறிய நாள். உலகில் கறுப்பு, வெள்ளை, இடை நிறமான பழுப்பு நிறம் என்ற நிறப் பாகுபாடுகளில் வெள்ளையினமே மேன்மையானது என்ற பாகுபடுத்திப் பார்க்கும் வெளிப்பாடுகள் இன்று வரை உலகின் பொலிஸ்காரனாக தன்னை வரிந்து கட்டிய அமெரிக்காவில் குறைந்த பாடில்லை.

சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா?

அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல!- ஓவியர் மருது பேட்டி

வீடு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. தேசத்தின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் அளிக்கத் தவறிவிட்டோம்.

ஆதலினால் காதல் செய்வீர்……

(சாகரன்)

(புகைப் படத்தை ஒரு கணம் பாருங்கள் பின்பு பதிவை வாசிக்க தொடங்குங்கள்…..)

மனிதர்களுக்கிடையே இடைவெளி அவர்களிடம் ஒரு மன இறுக்த்தை தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தற்போதைய பேரிடர். இது நாம் பலரும் தற்போதைய கொரனா தொற்றுக் காலத்தில் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனை. ஒரு நிச்சயமற்ற இலக்கு அற்ற பயணத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோமா என்ற நம்பிக்கையீனங்களை…. விரக்த்தியை நம்மில் பலரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.