ஆப்கன் எழுப்பும் கேள்விகள்

ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, தாலிபான்களால் கெரில்லா போர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒரு அரசாங்கத்தை நிறுவி அதனை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதற்கு விடை காண்பதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதே வேளையில், பயங்கரவாதத்தால் ஒரு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு, மாறுபட்ட ஓர் அரசைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலானது, வருங்காலங்களில் இவ்வகையான அரசியல் முறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.

மயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அத்தியாவசிப் பொருட்களின் சீரான விநியோகத்தை நோக்கமாகக் கூறி, ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிறப்பித்தார். ஆனால், அதன் முக்கியத்துவத்தையோ பாரதூரத் தன்மையையோ, தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்த இந்நாட்டின் ஏனைய ஊடகங்கள் காணவில்லைப் போலும்!

உறுதிமொழிகளை தலிபான்கள் காப்பாற்றுவார்களா?

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.

மம்மூட்டி

(Rathan Chandrasekar)

இப்போது அல்ல. 87, 88 இருக்கும்.
தூர்தர்ஷனில் மம்மூட்டியை நேர்காணுகிறார்கள்.
சினிமா எனக்குத் தொழில். என்னை ரசிக்கலாம். ஆராதிக்கக்கூடாது என்கிற மாதிரியே சென்றுகொண்டிருந்த அந்தப் செவ்வியில் – அவரை “கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான நீங்கள்….” என்றபடி, எதுவோ கேட்க முற்படுகிறார் நேர்காணுகிறவர்.
மம்மூட்டி சொல்கிறார் :
“நான் கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்ல. மோகன்லால்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!”

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது.

நியூசிலாந்தின் முன்மாதிரியான அணுகுமுறை

(மொஹமட் பாதுஷா)

ஒருகாலத்தில் நியூசிலாந்து என்றால் ‘முழுஆடைப் பால்மா’ ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த சில வருடங்களாக, நியூசிலாந்து என்ற பெயரைக் கேட்டதும் கண்முன்னே வருவது, அந்நாட்டின் பிரதமரும் அவரது ஆளுகையுமாகத்தான் இருக்கும். 

வ.உ.சி. 150

ஆங்கிலேயர் அஞ்சிய எலும்புகள்

வ.உ.சி.க்கு எதிரான அரச நிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து ஆங்கிலேய நீதிபதி ஏ.எஃப். பின்ஹே 1908 ஜூலை 7-ல் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்…’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிக் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வ.உ.சி. உருவாக்கியிருந்த எழுச்சி.

மரணக்குழிகள்

(Johnsan Bastiampillai)

இயற்கை எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் முக்கியமான ஒன்று, ‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்பதை, உலக நடத்தைகளை உற்றுநோக்கி அவதானித்தால், அச்சொட்டாக உண்மைதான் என உணரமுடிகிறது.

ஆப்கானிஸ்தான்: திரும்பிப் பாருங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் கொரோனாவா, நிர்வாகச் சீர்கேடா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கொவிட்- 19 தொற்று நாட்டு மக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தியும் அந் நோய் தடுப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பயணத் தடைகள் போன்ற நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் திரும்பியும் இருக்காவிட்டால் பொருளாதார பிரச்சினைகளுக்காக  ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது.