மனநோய்!?

உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின் கடைசியிற்தான் சொல்லப்போகிறேன். அதற்கு முன்பாக சில விஷயங்கள். உலகம் முழுவதும் இன்று இளையோரைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானதாக, ‘டிப்பிறசன்’ என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோய் பெருகி வருகிறது. ஒழுக்கயீனம், அன்பின்மை, பேரதிர்வு, பெரும்மனச்சுமை போன்ற பல காரணங்களால், இந்நோய் உருவாகுவதாக விஞ்ஞான உலகம் கூறுகிறது.

(“மனநோய்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள். இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!

இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது.

(“ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்- களைகட்டும் அதிபர் தேர்தல்!” தொடர்ந்து வாசிக்க…)

கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர்?

கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முறன்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன. கடந்த வார வடக்கு மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்ட ஆளும் கட்சி (தமிழரசுக்கட்சி) உறுப்பினர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபையை முடக்குமளவுக்கு செயற்பட்டிருந்தனர். உண்மையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியா? ? ஆல்லது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்குச் செல்வதற்கு முன் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தன்னுடைய கட்சிக்காரர்களாலேயே கேள்விக்கு மேல் கேள்வி கேட்குமளவுக்கு இப்போது அப்படி என்ன நிகழ்ந்து விட்டது என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்போமானால் மிகுதி கேள்விகள் யாவற்றுக்கும் இலகுவில் விடைகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?

(“கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர்?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு கொழும்பு விசும்பாயவில் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டத்தரணியும், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த தயாரிப்பில் முன்னிலை வகித்தவரும், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியில் முக்கிய நபராகவும் விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விசேட விரிவுரையொன்றை நடத்தியிருந்தார். அதன் முழுவிபரம் வருமாறு:

(“அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்” தொடர்ந்து வாசிக்க…)

உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!

புதிய அரசியலமைப்புக்கு பொது மக்களின் அபிப்பிராயங்களை அறியும் குழுவினர் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் தமது செயலமர்வுகளை நடத்தியிருந்தனர். ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தரவில்லை. இந்த ஏமாற்றத்தை இந்தக் குழுவின் செயலமர்வுகளை கண்காணிக்கும் அமைப்பினர் வெளிப்படுத்தினர்.

(“உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

(1968 களில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்ய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எமது சமூகத்தில் நடைபெற்ற போராட்டதில் மிக முக்கியமானது. இதன் பெரு வெடிப்புக்கள் அச்சுவேலிஇ சங்கானைஇ மாவிட்புரம்இ மந்துவில் போன்ற இடங்களில் ஏற்பட்டன. இதில் இரத்தினம். தவராசா என்ற இருவர் கொல்லப்பட்டனர். சீனக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தனர் தமிரசுக் கட்சியினர் ஆதிக்க சாதியினர் பக்கம் பக்க பலமாக நின்றனர். இவர்கள் தமக்கு பக்க பலமாக தமிழ் பொலிசாரையும் வைத்திருந்தனர். இவை பற்றி கேட்டவற்றை அறிந்து அனுமானித்ததை விஜய பாஸ்கரன் என்பவர் தனது மொழி நடையில் எழுதுகின்றார். அவரால் பாவிக்கப்படும் சில சொற் பிரயோகங்களில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லையாகினும் அவர் சொல்ல வந்த விடயத்தில் உடன்பாடுகள் நிறையவே உள்ளன. இதனை ஒரு அவசியான வரலாற்று ஆவணப் பதிவாக பார்பதினால் இதனை வெளியிடுகினறோம் – ஆர்)

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)” தொடர்ந்து வாசிக்க…)

விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?

பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்படும் இரகசியம் “தமது பிரதேசங்கள் பொருளாதார வளமிக்க இடமாக இருப்பதுவே காரணம் என அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

(“விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன் மொழிய வேண்டும் என பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.எம்.சித்தீக் தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் “உத்தேச அரசில் யாப்பும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிமை (14-02-2016) காலை தொடக்கம் மாலை வரை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

(“கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!” தொடர்ந்து வாசிக்க…)