குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். (“குருந்தூர் மலைக்கு செல்ல தற்காலிக தடை” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் சேவையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்

நேற்றையதினம் 07/09/2018 வெள்ளிக்கிழமை, ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலத்தில் பொதுமக்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேசசபை ஊழியர்களுடன் இணைந்து சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப்பணியின் போது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளை மேடு பள்ளமாக காணப்பட்ட ஆத்திமோட்டை 7ம் வீதி குறுக்குஒழுங்கையில் கொட்டப்பட்டு நண்பர்களுடன் இணைந்து நிரவப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மட்டக்களப்பு, புல்லுமலை தண்ணீர் போத்தலிடும் தொழிற்சாலைக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை (07) நடைபெறுவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள் பல பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர். குறித்த ஹர்த்தாலுக்கான அழைப்பு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் விடுக்கப்பட்டிருந்தனர். (“தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

7 பேரை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வருகின்றன பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக அரசிற்கு உள்ளனதென, உச்ச நீதிமன்றம் ​அறிவித்துள்ளது.

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது என்றொரு சுற்றுநிருபத்தை வடமாகாண கல்வியமைச்சு அறிவிக்கப் போவதாக கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் சொல்லியிருக்கிறார். எந்தக் கலை வடிவத்தை எங்கு, யார் நிகழ்த்த விரும்புகிறார்களோ அவர்கள் அங்கு அப்படி நிகழ்த்துவதை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ அமைச்சுகளுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரமில்லை. ஆடும் கலைஞர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

(“இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)

‘இராணுவத்தினர் வசம் 4,500 ஏக்கர் உள்ளன’

யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளனவென, யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த ​சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தனர் என்றுத் தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், துரோகிகள் என்று அழைத்த எமது கட்சியினர் தான், உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் அந்தத் ‘துரோகி’களுடன் இப்போது கூட்டு வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்

அரசியல் தொழிற்சங்க பேதமின்றி இணைவோம்

மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பில் நேற்று (01-09-2018) இடம் பெற்ற மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ‘பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமை சம்மேளனம்’ (Plantation Labour Rights Confederation) என்ற பொது அமைப்பு தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்த ஏழு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மூன்று தனிநபர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட முன் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பின் வரும் நபர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

(“‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்” தொடர்ந்து வாசிக்க…)

அடையாள அட்டை கட்டணம் உயர்வு

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“அடையாள அட்டை கட்டணம் உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)