கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

(“கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்” தொடர்ந்து வாசிக்க…)

தேசத்துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இடம்பெற்ற, ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பேசிவிட்டு இன்று அதிகாலை நோர்வேயிலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி காலமானார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. சூத்திரம் இணைத்தளத்தின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலி

காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

காத்தான்குடி நகரில் கடைகள் பூட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அத்துடன், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, காத்தான்குடி பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர்ந்து இன்று (03), காத்தான்குடி நகரில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்

இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.

(“விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பொலிஸாரின் விடுமுறை இரத்து

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது. (“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)

அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமானப்படுத்துவதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது ஒரு அநாகரிகமான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாநகர சபை அமர்வில் கோரியது.

(“அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் சீனா நேரடி முதலீடு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 ​மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்ய, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

(“இலங்கையில் சீனா நேரடி முதலீடு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது.

(“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)