‘நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்’

“மன்னார் மாவட்டம் 42 ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கட்சி ஒன்றால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ்த் தலைமைகளும் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பற்றி வினவியபோதே அவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தினார்.

வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(“வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் நெருக்கடி: 3 மணிநேரம் விவாதிக்க இணக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ​நெருக்கடி தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையை அடுத்து, சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது. அதன்பின்னர், சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்தே, அரசியல் நெருக்கடி தொடர்பில், மூன்று மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக, நடத்தப்படவுள்ளது.

‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆதரவுடன், கூட்டமைப்பு அரசாங்கம் நாளை (20) செவ்வாய்க்கிழமை அமைக்கப்படும்” என தென் மாகாண ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்

தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான மந்துவிலைச் சேர்ந்த இரத்தினம் அவர்கள் சக நண்பனான பனியன் ராசன் என்பவனால் நயவஞ்சகமாக எதிரிகளின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. 18/02/ 1968 இல் கொல்லப்பட்டார்.1935 ஆம் ஆண்டு பிறந்த அவர் முப்பத்து மூன்றாவது வயதில் கொல்லப்பட்டார். இன்று அவரது ஐம்பதாவது நினைவு தினம். (“தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)

‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக, தான் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அலரி​மாளிகையில் முதன்முதலாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க” தொடர்ந்து வாசிக்க…)

புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

(“புதிய பிரதமர்; புதிய அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

பதவி விலகினார் தென்னாபிரிக்காவின் ஸூமா

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென, அவரது கட்சியிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தத்துக்கு அடிபணிந்தே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பதவி விலக வேண்டுமென்பதற்கான பணிப்புரையை, ஏற்கெனவே விடுத்திருந்தது. ஆரம்பத்தில் அதை ஏற்று நடக்க மறுத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார். 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அடுத்தாண்டு நடுப்பகுதியிலேயே பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொதுமக்களின் ஆதரவை இவர் இழந்திருந்தார்.

‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’

“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

(“‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’” தொடர்ந்து வாசிக்க…)