உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

எதிர்பார்த்தபடியே  வல்வெட்டித்துறை நகரசபை அறிவிக்கப்பட்ட 7 வட்டாரங்களும் TNA க்கு. ஊர்காவற்துறை ஈபிடிபி வசமாகும் வாய்புகள் அதிகமாகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

வாகரை பிரதேசசபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. வாகரை 6ஆம் வட்டாரம் ஊரியன்கட்டு,ஏழாம் வடடாரம் பனிச்சங்கேணி,8ஆம் வட்டாரம் மாங்கேணி என்பவற்றில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் முன்னணியில் இருப்பதாக அறிய முடிகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

வவுனியா நகரசபையில் கூட்டமைப்பிற்கு பினால் கூட்டணி. ஆனந்தனின் 2 கோடி பிரச்சாரம் நன்கு வேலை செய்துள்ளது. செட்டிகுளத்தில் சூரியன் உதித்துள்ளான்வ. வுனியா நகரசபைத் தேர்தலில் கோவிற்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற  PLOTE சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இருந்த அல்லது புலிகளின் முக்கியஸ்தர்கள் பிறந்த இடங்களில் சைகிள் முன்னிலை வகிக்கின்றது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

தீவுப் பகுதிகளில் அனேக இடங்களை தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளது. இக்கட்சியன் தேசிய அமைப்பாளர்கள் சீவரத்தினம் ஜெகன் போன்றவர்களின் கணிசமான பிரச்சாரம் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

(“62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சி தேர்தல்

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பில், 70 சதவீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வேட்பாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

‘எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’

(க.அகரன்)

“எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘காணாமல் போனோரை எங்கும் தேடி பார்த்தோம். காணவில்லை’ என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இருநாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

(“‘எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திரு பாலச்சந்திரன் சண்முகராஜா
பிறப்பு : 29 சனவரி 1956 — இறப்பு : 6 பெப்ரவரி 2018

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சண்முகராஜா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்

இத்தேர்தல் களத்தில் பல்வேறு சமூக விரோத சக்திகள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருடர்கள், சண்டியர்கள், காடைத்தனங்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள், பெண்களை இழிவுபடுத்தியோர் என பலதரப்பட்டவர்களும் இத்தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் பல சமூகவிரோத சக்திகளை தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.

(“உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்” தொடர்ந்து வாசிக்க…)