‘எமதுசமூகம் -கனடா’ ஆரம்பகலந்துரையாடல்

‘எமதுசமூகம் – கனடா’ கடந்த ஜனவரி 13ந்திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி 10ந்திகதி முதல் இயங்கும் ‘எமதுசமூகம் – கனடா’ WhatsApp குறூப்பினை ஒரு கட்டமைப்பாக ஒழுங்கமைத்து கிழக்கில் இடம்பெறும் சவால்களையும் தேவைகளையும் எவ்வாறு ஒன்றாக இணைந்து நிபர்த்தி செய்யலாமெனவும் சிறுதொழிற்சாலைகள் அல்லது காணிகளை வாங்கி அதில் பயன்பெறுவதற்குமான ஒரு திட்டத்தினையும் வகுக்கலாம் எனஎண்ணியுள்ளோம். அதனடிப்படையில் கிழக்கிலங்கையின் நமது நிலம், பொருளாதாரம், கல்வி, பதவி போன்றவற்றில் எவ்வாறு வளர்ச்சியடையலாம் என்பன போன்ற ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தவுள்ளோம். இங்குபலர் மண்ணிற்கும் மக்களுக்குமாக பணியாற்றிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. எனவே எமதுசமூகத்திற்கு பயனுள்ள ஆலோசனைகளை கலந்துரையாட உங்களை அழைக்கின்றோம்.  மேலும் எமது சமூகம் கனடா WhatsApp இல்உங்கள் நண்பர்கள் விரும்பின் பெயர் WhatsApp இலக்கத்தையும் தந்தால் இணைத்துக்கொள்ளலாம்.
Meeting Date: March – 5th Sunday Time: 2.00 PM Place: Etobicoke Civic centre # 399 – The West Mall (427 & Burnhamthope)
நன்றி.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு

‘லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சியை சென்னையில் அண்மையில் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இப்புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்காக சென்னையில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் கட்சியின் தலைமை அலுவலகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கட்சி தொடங்கிய இரு நாட்களில் ஆன்-லைன் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகி உள்ளனர்.

(“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம்: ‘என் தேசம் என் உரிமை’ கட்சி அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டுள்ளார்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

(“கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.
இது ஒரு அசுர முயற்சி என சுவிஸ் பொலீஸ் கூறுகிறது. சுமார் 8 வருட முயற்சியின் பின்னர் பயங்கரவாதிகளுக்குப் பணம் திரட்டியதாக சுவிற்ஸலாந்து உயர் நீதிமன்றத்தில் 13 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 12பேர் தமிழர்கள். ஒருவர் ஜேர்மானியர்.
இலங்கையில் 26 ஆண்டுகளுக்கு மேலான போரில் சுமார் 100,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

(“சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!” தொடர்ந்து வாசிக்க…)

We have killed many political opponents in the past, says BJP Kerala General Secretary K.Surendran

In a speech revealing the BJP’s gameplan of organised violence and killings of rival political party members, Kerala BJP General Secretary K.Surendran said that they have attacked and killed opponents in the past, but have stopped it for the time being. But the Sangh will stop CPI(M) leaders wherever they go, he said.

(“We have killed many political opponents in the past, says BJP Kerala General Secretary K.Surendran” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்பின் மனைவி மீது குவியும் குற்றச்சாட்டுகள்! நாடு கடத்தப்படுவாரா…?

(எஸ். ஹமீத்)

1996 ம் ஆண்டு சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்த தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவியான மெலானியா அமெரிக்க சட்ட நிபந்தனைகளை மீறி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் வசிப்பதற்கான சட்ட அனுமதி கிடைக்கும் முன்னதாகவே மெலானியா 20 ,000 டொலர்களுக்கு மேல் அங்கு சம்பாதித்திருப்பதாக அசோசியேட் செய்தி நிறுவனம் திரட்டிய ஆவணங்களின் மூலம் அறிய வந்துள்ளது. 2001ம் ஆண்டு அமெரிக்காவில் வசிப்பதற்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த போதும், அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு அமெரிக்கப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அவர் தான் சட்டபூர்வமற்ற வகையில் உழைத்த பணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கவில்லையென குடிவரவுக்கான சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(“ட்ரம்பின் மனைவி மீது குவியும் குற்றச்சாட்டுகள்! நாடு கடத்தப்படுவாரா…?” தொடர்ந்து வாசிக்க…)

பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு விமானப் படை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த படை முகாமில், 54 குடும்பங்களுக்குச் சொந்தமாகவுள்ள சுமார் 40 ஏக்கர் காணியினை, எதிர்வரும் சில நாட்களில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு சமிக்ஞை காட்டியுள்ளது.

(“பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’” தொடர்ந்து வாசிக்க…)

‛பூமியை போன்று 7 புதிய கோள்

‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது’ என நாசா அறிவித்துள்ளது.

7 புதிய கோள்கள்:

சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய மைல் கல்:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

சி.விக்கு மாரடைப்பு

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை முதலமைச்சருக்கு, கடந்த 1997ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றிருக்கின்ற நிலையில், தற்போது அவருக்கு சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.