கொழும்பில் மாணவர்கள் ஆர்பாட்டம்

“தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல!” ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய (31/08/2016) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பி ஓடிய புலிகள் புலிப் பணத்தை சுட்டுக் கொண்டு ஓடிய புலிகள்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

(“பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பி ஓடிய புலிகள் புலிப் பணத்தை சுட்டுக் கொண்டு ஓடிய புலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸைத் தொடர்ந்து நோர்வேயிலும் புர்கினிக்குத் தடை?

பெண்களின் உடலில் முகத்தைத் தவிர ஏனையவற்றை மறைக்கும் நீச்சல் ஆடையான புர்கினியை, நோர்வேயிலும் தடைசெய்ய வேண்டுமென, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கட்சியான முற்போக்குக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பல நகரங்கள், இவ்வகை ஆடைகளை ஏற்கெனவே தடைசெய்துள்ள நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(“பிரான்ஸைத் தொடர்ந்து நோர்வேயிலும் புர்கினிக்குத் தடை?” தொடர்ந்து வாசிக்க…)

நாளை வருகிறது அமெரிக்க கப்பல்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், நாளை திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும். ரணில் அரசின் அமெரிக்க சார்பு அரசயின் மெதுவான் காய் நகர்தலின் ஒருவடிவமாக இதனை அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர்

மரண அறிவித்தல்

திரு அன்டன் செல்லையா

தோற்றம் : 13 யூன் 1948 — மறைவு : 25 ஓகஸ்ட் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்டன் செல்லையா அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் மகனும், குலம் வேதநாயகம் தம்பதிகளின் மருமகனும்,

கல்யாணி அவர்களின் கணவரும்,

அஸ்வினி, ஆதித்தி ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், நவம், மற்றும் அமலதாஸ், சார்ல்ஸ், ஜோனாஸ், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சேவியர், குலேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,

மனோ சிவநாதன், கௌரி வரதராஜபெருமாள், போல் பிரகலாதன், சரத்மதி சமரக்கொடி, நளினி ரோய், பூங்கோதை அல்போன்ஸ் ஆகியோரின் மைத்துனரும்,

மேனோரா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
போல் பிரகலாதன்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
கல்யாணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +91988439707
நளினி ரோய்(மைத்துனி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919710434354
போல் பிரகலாதன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944474839

வருடாந்த திருவிழாவை கொண்டாட இராணுவத்தினர் அனுமதி

யாழ்ப்பாணம், பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தைக் கொண்டாட, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு பிரதேசங்களில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், பலாலி வடக்கு ஜே-254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1,500 குடும்பங்கள், இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள்.

(“வருடாந்த திருவிழாவை கொண்டாட இராணுவத்தினர் அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!!!

ஈழத்தமிழர்கள் திருடர்கள், இவர்களுக்காக போராடியதை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது என்றார் இயக்குனர் சேரன்.
இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

(“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!!!” தொடர்ந்து வாசிக்க…)

இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி

இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், இன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது.

(“இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ் ‘போதைக்கெதிரான யுத்தம்’: இதுவரை 1,900 பேர் மரணம்

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக இவ்வாண்டு மே மாதத்தில் றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவுசெய்யப்பட்ட பின்னர், 1,900க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய பொலிஸ் தலைவர் றொனால்ட் டெலா றோசா விடுத்த அறிவிப்பிலேயே இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(“பிலிப்பைன்ஸ் ‘போதைக்கெதிரான யுத்தம்’: இதுவரை 1,900 பேர் மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு

ஜேர்மனியின் ப்ராங்போர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானம், குறிப்பிட்ட நேரத்தை விட 15 மணித்தியாலங்கள் தாமதித்துப் பயணித்ததால், அவ்விமானத்தில் பயணித்த 259 பயணிகளுக்கு, 260 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நட்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை, குறித்த விமானசேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(“விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு” தொடர்ந்து வாசிக்க…)