அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா

இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

(“அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா” தொடர்ந்து வாசிக்க…)

பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’

“மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வரும், வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் மயிலம்பாவெளி ஆகிய இடங்களிலுள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் விடுவித்துக் கொடுக்கமுடியும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

(“பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவல்னி உள்ளிட்ட 900 பேர், நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டனர். மோசடிக்கெதிராக, தடையினை மீறி, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து சாம்ச்சியமொன்றை, இலாபமற்ற நிறுவனங்களின் நிழல் வலையமைப்பூடாக, பிரதமர் டிமித்திரி மித்வேவ் கட்டுப்படுத்துகிறார் என்ற விவரமான அறிக்கையை இம்மாதம் பிரசுரித்திருந்த நேவல்னி, ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

(“ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்

தென்சூடான் தலைநகர் ஜுபாவிலிருந்து பிபோர் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலொன்றில், ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள், நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், கொல்லப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணியாற்றினார்களா என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டி -ருக்கவில்லையென்பதுடன், மேலதிக விவரங்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

(“தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்தார் ரஜினி

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தாம் அரசியல்வாதியல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், இனிவரும் காலங்களில் இலங்கை வந்து, புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தால், அரசியல் காரணங்களுக்காகப் போகவிடாமல் செய்து விடாதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ். வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயரந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் யாழில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் மேற்படி பணியகத்தின் தலைவியுமான சந்திரிகா, யாழுக்கு இன்று (25) வருகை தந்திருந்தார்.

(“‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு

வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

(“ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூர் விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிப்பு

நாடாளுமன்றத்தில், நேற்றுக் காலை சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான அனுமதியின் பின்னர், குறிப்பிடப்பட்ட உள்நாட்டு விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை – காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொது- தனியார் பங்குகளின் அடிப்படையிலேயே, இந்த விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டங்களை, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு கையாளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

36 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது.

(“36 அகதிகள் நாடு திரும்பினர்” தொடர்ந்து வாசிக்க…)