சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு – யாழ்ப்பாணம்

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.09.2016 (ஞாயிறு) பி.ப. 3.30 மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர்கூடத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் திரு க. ஆனந்தகுமாரசுவாமி அவர்களுடைய தலைமையில் இடம்பெறவுள்ளது.

(“சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு – யாழ்ப்பாணம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் ஊர்வலத்தில் தமிழரசுக்கட்சி, வணிகர் கழகம் பங்கேற்காது தமிழர் விடுதலைக் கூட்டணி ஒத்துழைப்பு

தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 24 ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஊர்வலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என இலங்கைத் தமிழரசுச் கட்சி அறிவித்துள்ளது.பன்நாட்டுச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசமைப்பு உருவாக்கம் இந்த ஆண்டு இடம்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்த போது அதனை நையாண்டி செய்த தரப்புக்களுடன் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பு மேற்கொள்ளும் ஊர்வலம். எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கும் போது இது நடக்காது அல்லது இதில் பிரயோசனம் இல்லை என்று எதிர்த்துவிட்டு பின்பு அதையே கோருவதன் மூலமாக முன்னர் நாம் எடுத்த நிலைப்பாடு சரியென நீங்கள் ஆமோதிப்பதாகவே கொள்ளவேண்டியுள்ளது. மேலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் இந்த ஊர்வலத்தில் பங்கெடுப்பது இரட்டை நிலைப்பாடாக பன்நாட்டு சமூகம் பார்ப்பதற்க இடமளிக்கும் எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.

(“தமிழ் மக்கள் பேரவையின் ஊர்வலத்தில் தமிழரசுக்கட்சி, வணிகர் கழகம் பங்கேற்காது தமிழர் விடுதலைக் கூட்டணி ஒத்துழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

போதைக்கெதிரான போர் 6 மாதங்கள் நீடிக்கும்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவான பின்னர் போதைக்கெதிரான போர் என்ற பெயரில் அந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு, ஜனாதிபதி டுட்டேர்ட்டே கோரியுள்ளார்.

(“போதைக்கெதிரான போர் 6 மாதங்கள் நீடிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

செல்சி தாக்குதல் சந்தேகநபரின் விவரங்கள் வெளியிடப்பட்டன

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் பகுதியிலுள்ள செல்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் விவரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

(“செல்சி தாக்குதல் சந்தேகநபரின் விவரங்கள் வெளியிடப்பட்டன” தொடர்ந்து வாசிக்க…)

திருமலையில் கவனயீர்புப்போராட்டம்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியினால் திருகோணமலை நகரசபைக்கு உட்பட்ட “மலை அருவி” எனும் பெயர் கொண்ட சந்தையை திறப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் திருமலை நகர சபைக்கு முன்பாக நடாத்தப்பட்டது. திருமலை மக்களின் நீண்ட காலத்து கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்

பதிலளிப்பாரா பிரேமசந்தின்

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ் குடாநாட்டு மக்கள் அனைவரையும் யாழ் முற்றவெளி நோக்கி அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்……. (கணொளியைக் காண…….) – Suresh Prmanchandran

(“பதிலளிப்பாரா பிரேமசந்தின்” தொடர்ந்து வாசிக்க…)

எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய….

எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய
மதிப்பீட்டுப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை களத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறார் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கே.கம்ஸநாதன். பதிவு செய்யப்பட்ட 124 கடைகள் அழிவில் சிக்கியுள்ளன. 64 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன. 60 கடைகள் பகுதிச் சேதம் அல்லது பகுதி அழிவு. மொத்தமாக 124 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

(“எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய….” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல்

 

மாற்றுக் குரலுக்கான செயற்பாட்டாளர்கள், அமைப்பின் ஒழுங்கு படுத்தலின் விளைவாக , இன்று 17.09.2016, யாழ். நூலக உணவு விடுதியில், இன்றய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல் பற்றிய விவாதம் நடைபெற்றது. மிகவும் நல்ல முயற்சி இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு முற்போக்கான மாற்றுத்தலமையை உருவாக்க வேண்டும் இது மக்களுக்கான கூட்டுத்தலமையாக அமைய வேண்டும். பெண்கள் பெருமளவில் வரவில்லை . அது ஒழுங்குபடுத்தியோரின் ‘நெட்வெர்க்’ ‘பற்றாகுறை’ அல்லது அழைக்கப்பட்ட அமைப்புகள் பெண்களை இதில் பங்கு அனுப்பவில்லை .. இதில் பெண்கள் சிலர் இந்த படங்களை எடுத்த எனக்கு பின்னால் , இருந்தனர். இதில் பங்குபற்றியோர் அனைவரின் படமும் இங்கு பிரசுரமாகவில்லை… இது ஒருபக்கமிருக்க , இந்த கூட்டத்தில் பெண்ணுரிமை, பெண்ணியம் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்களை ஏற்படுத்த போராட முடியும் ..

ஏறாவூர் இரட்டைப்படுகொலை: மேலும் நால்வர் கைது

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

(“ஏறாவூர் இரட்டைப்படுகொலை: மேலும் நால்வர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

(“நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)