கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.

(“கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் / இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இதன் வீச்சு உலக நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் இடமெங்கும் பரவியது. லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஓரணியாகத் திரண்டதால் ஆங்காங்கு ஆதரவாக பெற்றோர், பொதுமக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்தது. ஒருகட்டத்தில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள், பென்கள், குழந்தைகள் வந்ததாலும் இந்த அறவழிப் போராட்டம் இரவு – பகல் என ஒரு வாரம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது உலகின் பார்வையையே போராட்டத்தின் பக்கம் திருப்பியது.

(“ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!..

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கையாக, சமஸ்டி அரசியல் அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பே முன்னிலை பெறுகிறது. இதில் சமஸ்டிக்கு முறைமைக்கு சிங்கள பெரும்பான்மை சம்மதிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் பெரும்பான்மை இணங்கவில்லை. இதுவே என்று எல்லோர் வாயிலும் அகப்பட்ட அவல்.

(“முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!..” தொடர்ந்து வாசிக்க…)

வினை தீர்க்கான் வேலவன்

ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.

(“வினை தீர்க்கான் வேலவன்” தொடர்ந்து வாசிக்க…)

கடாபியின் மறுபக்கம்

லிபியாவின் கடாபியை உலகம் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அவரது மறு பக்கம் சுவாரஸ்யமானது. அதனையும் பார்ப்போம் வாருங்கள்.

(“கடாபியின் மறுபக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

புத்த பெருமான் உடைப்பு.

திருகோணமலையில் 4 இடங்களில் புத்த பெருமானின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார வேலைகளை செய்தவர்கள், இனங்களுக்கிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கி நல்லாட்சியை கவிழ்ப்பதாக இருக்கலாம். அவர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்த இனமாக இருந்தாலும் , வணங்கும் தெய்வங்கள் மீது கை வைப்பது மனித உரிமை மீறும் செயல். இந்த மனித உரிமை மீறும் செயலை செய்தவர்களை நாம் மிக கடுமையாக கண்டிக்கிறோம்.

(SDPT Trinco)

2016 வருடத்திற்கு விடைகொடுப்போம் புதிய வருடத்தை வரவேற்போம்

சூத்திரம் இணைய வாசக உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்து செல்லும் வருடத்திற்கு நன்றியுடன் விடை கொடுப்போம் உதிக்கும் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

அரசும்….! மதமும்….!!

கிறிஸ்தவக் கன்னியர் மடத்தில்தான் ஆரம்பம் முதல் படித்தேன்.. அந்த நாட்களில் ஓரிருவரைத் தவிர எல்லாக் கன்னியாஸ்திரிகளுமே மதவெறி ..சாதிவெறி…பணக்காரப்பிள்ளைகள் மீது மோகம் என்பவற்றில் மூழ்கியிருந்தார்கள்..இவர்களோடும் போராடித்தான் என் படிப்புக்காலம் கழிந்தது. என் போராட்டக் குணம் அவர்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை..கூடிக்கூடி என்னைப்பற்றியே பேசினார்கள் …பலவிதத்தில் என்னை இம்சையும் செய்தார்கள்.. நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் தொடர்ந்து அவர்களோடு படிக்க முடிந்தது.

(“அரசும்….! மதமும்….!!” தொடர்ந்து வாசிக்க…)