மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை

(அ. அகரன்)

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும்.

(“மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.மு இறுதித் தீர்மானம்

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பில், இன்று (03) இரவு, ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லையென, ஐக்கிய தேசியக் கட்சி அடங்கலான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றார். அவ்வாறாக, இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.

வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டங்கள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. திருக்கோவில் ஆர்ப்பாட்டம், திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பாலும், அக்கரைப்பற்று ஆர்ப்பாட்டம், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

(“வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்ற படைப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை நடத்தியதுடன், விசாரிப்பிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

(“வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்

மீடூ இயக்கம் தொடர்பான மோகன்லாலின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் மீடூ இயக்கம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. தமிழ், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். (“நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலியையும் கிண்டல் செய்து ஆஸி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்லும் வெளிநாட்டு அணிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது.

(“இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?

(ஜெரா)

தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பௌத்தமயப்படுத்துவதற்கு, பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா?

(“தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15)

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். .நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. .நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15)” தொடர்ந்து வாசிக்க…)

’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’

பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றில் புதிய பிரதமரை நியமிக்கக்கோரும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. (“’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்

தற்போதைய அரசியல் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் மேற்கொள்ள, ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

(“அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)