வெருகல் கலாசாரம்

வெருகல் ஒரு சிறப்பு மிகு கலாசாரத்தின் சங்கமம் கொட்டியாரத்தின் பெருமையயை பறை சாற்றும் உறவுகளின் சந்திப்பாய் தடம் பதித்த ஒரு பண்பாட்டு படர்ச்சி. திருகோணமலைத் தமிழகமும் மட்டக்களப்பு தமிழகமும் இணைந்த ஒரு தேசத்தார் கோயிலின் வளக்காறாய் நீண்டிருக்கும் தொல் மரபு இங்கு புதைந்து கிடக்கிறது.

(“வெருகல் கலாசாரம்” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லா பிரேரணை சி.விக்கு எதிராக வருகிறது?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது என்றும் அந்த தகவல் தெரிவித்தது.

தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்

தமிழ்த் தேசிய அரசியல் வழி நின்று செயற்படுகின்றவர்களான, சமஷ்டிக் கோரிக்கையினை வலியுறுத்தி நிற்கின்றவர்களான சி.வி. விக்கினேஸ்வரனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருவதொன்றாக அமையவில்லை.

(“தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

எப்போதாவது நடக்கும் கதைகள்: கதவருகே ஒரு கிளர்ச்சியாளர்

(கலாநிதி லக்சிறி பெர்ணாண்டோ)

எங்கள் முன் கதவை யாரோ மென்மையாகத் தட்டும் சத்தம் கேட்டு நான் திடீரென கண் விழித்தே. மற்ற நாட்களில் நாங்கள் அனைவரும் இந்த நேரத்துக்கு எழுந்து விடுவோம், ஆனால் இது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக விடுமுறை காலமாக இருந்தது. அதனால் நான், எனது மனைவி மற்றும் மகன் ஆகிய அனைவரும் ஒரு இலகுவான நேரத்தை அனுபவித்து வந்தோம். இவ்வளவு நேரத்துடன் எங்கள் வீட்டுக்கு யார் வந்திருக்கக் கூடும், என நான் ஆச்சரியப் பட்டேன் எங்கள் வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யும் பெண்ணான விமலா வெளிக் கதவை நோக்கி நடந்து சென்று அதைத் திறப்பதை நான் கேட்டேன், மற்றும் அவள் திரும்பவும் எங்கள் அறைக் கதவின் அருகே வந்து “ஐயா யாரோ உங்களைக் காண வந்திருக்கிறார்” என்று சொன்னாள்.

(“எப்போதாவது நடக்கும் கதைகள்: கதவருகே ஒரு கிளர்ச்சியாளர்” தொடர்ந்து வாசிக்க…)

வன்புணர்வாளர்களுக்காக வக்காலத்து வாங்கும் வடக்கு முதல்வர்!?

விதியே நீ வடபகுதி தமிழரை என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வி தொடரும் நிலையில் நாட்டு வழக்கு ஒன்று என் மனதில் எழுகிறது. ‘’ இருந்ததும் அது வந்ததும் அது சிவன் தந்ததும் அது’’ எனும் சொல் வழக்கே அதுவாகும். அதுவே இன்றைய வடக்கின் நிலை. சிவசிவ என நெற்றியில் நீறணியும் கம்பவாருதி உட்பட நீலகண்டனும் உமையிடம் அழுது பால் அருந்திய சம்மந்தரும் கூட்டி வந்து, பட்டு வேட்டி குங்கும பொட்டுடன் குரு வணக்கம் சொல்பவரை அரியணையில் அமர வைத்தனர்.

(“வன்புணர்வாளர்களுக்காக வக்காலத்து வாங்கும் வடக்கு முதல்வர்!?” தொடர்ந்து வாசிக்க…)

கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.

கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. எனவே, இக்கட்டுரையில் கேரளத்தில் வாழுகின்ற ஈழவர் குறித்து கிடைக்கிற தகவல்களைத் தொகுத்து முன்வைக்க முனைகிறேன்.

(“கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பொருளாளரான நற்பிட்டிமுனையை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் – வயது 67 மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்முனை பொலிஸார் நீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோருவதாகவும் இச்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

(“கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா

இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (08) பிற்பகல், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. சிங்களம், தமிழ், ஆங்கில இலக்கியத்தின் மேம்பாட்டுக்காகச் செய்த சேவையை கௌரவித்து வழங்கப்படும் சாகித்திய ரத்ன விருது, பேராசிரியர் ஆரிய ராஜகருணா, நீர்வை பொன்னையன், ஜீன் அரசநாயகம் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

(“ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியம்: ஜனநாயகத்துக்கான வெகுஜன அரசியல்

தோழர் சிறிதரனுடன் ஒரு நேர்காணல்

அகிலன் கதிர்காமர்

புரட்சி சாத்தியமானது என நாங்கள் நம்பினோம்:

இடதுசாரிகள் ஐக்கியப்பட வேண்டும்:
இங்குள்ள அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ பிரபுக்களைப் போல செயற்படுகிறார்கள்:sritharan-11
கேள்வி: உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பின்னணி பற்றிக் கூற முடியுமா? உங்கள் அரசியல்மயமாக்கலில் அது செல்வாக்குச் செலுத்தியதா?

(“தமிழ் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியம்: ஜனநாயகத்துக்கான வெகுஜன அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்

(Ahilan Kadirgamar)
வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை, சி.க.செந்தில்வேல்,
(புதிய நீதி வெளியீட்டகம், ஜீலை 2017). யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும் பரிசோதனை செய்வதும், எங்களுடைய முக்கியமான கடமையாகும்.

ஆனால் யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான், நேர்மையுடனும் விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க செந்தில்வேலின் புத்தகம், போருக்கு பின்னான தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது.

(“இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்” தொடர்ந்து வாசிக்க…)