மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை இடம்பெற்ற பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளாக குறித்த பஸ் சேவை இடம்பெறாமையால் மக்கள் பல்வேறு அ​சௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

(“மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

சி.விக்கு எதிராக டெனிஸ் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

(“சி.விக்கு எதிராக டெனிஸ் மனு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.

சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும். இலங்கை இந்தியாவின் வளர்ச்சியடைந்த தென் இந்திய மாநிலங்களுக்கு அருகாமையில் இருக்கிறது. இந்த வளர்ச்சியும் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு பட்டவை என்பதே புவி பொருளாதார அரசியல் யதார்தமாகும். 1.5 மில்லியன் புலம் பெயர் மக்களுடனான சமூக பொருளாதார தொடர்புகள் அதிகமாகும். இங்கு உற்பத்தி சந்தை நடவடிக்கைகள் வேலைவாய்ப்புக்கள். கல்வியில் மறுமலர்ச்சி வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. (“வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுக்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் சங்கரி

“இனப்பிரச்சினை தீர்வுக்கு நீண்ட தாமதம் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை என்பதுதான் பிரதான காரணமாகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

(“தீர்வுக்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் சங்கரி” தொடர்ந்து வாசிக்க…)

நீரில் மூழ்கித் தப்பிய யாழ்.மாணவி மரணம்

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில், கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியொருவர் உயிரிழந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவியான சகாயதாசன் டயானா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவர்,மண்பிட்டி நாவாந்துறையைச் சேர்ந்தவராவார் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்துக்கு சென்றபோதே இந்த விபத்து நடந்தது. ஒரு படகில் 6 பேர் பயணித்துள்ளனர். இதன்போதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று விசாரணைகளிலிருந்து தெரியவருந்துள்ளது.

(“நீரில் மூழ்கித் தப்பிய யாழ்.மாணவி மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

சரி, விஜயதாச, ப. டெனிஸ்வரன் போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?

கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(“சரி, விஜயதாச, ப. டெனிஸ்வரன் போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு பொறுக்கியெடுத்துள்ளனர்.

(“புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன” தொடர்ந்து வாசிக்க…)

’ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை’

எமது நியாயமான போராட்டம் தொடங்கி மூன்று மாதங்கள் நெருங்குகின்றபோதும் உயர் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட எவரும் கவனத்தில் எடுக்காததால் நாம் இந்தப் பாதயாத்திரைப் பேரணியை எமது போராட்டத்தின் ஒரு வடிவமாக ஆரம்பித்துள்ளதாக, செவ்வாய்க்கிழமை மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக தலைமை வளாகத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரைப் பேரணி, ஏறாவூர் நகர சபை வரை சென்று பிர்சாரத்துடன் முடிவுற்றது.

(“’ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையிலேயே, இந்த நிலைப்பாட்டை, அவ்வொன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. பிரெக்சிற் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில், நேற்று முன்தினம் ஆரம்பமாகின. அதன்போதே, இந்த நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர் வெளிப்படுத்தினார்.

(“பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநாச்சி – பரவிப்பாஞசான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

(“‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’” தொடர்ந்து வாசிக்க…)