மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?

“பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம்.

(“மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்?” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 6)

(அருண் நடேசன்)

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.
தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.

(“மே 18 (பகுதி 6)” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 5)

(அருண் நடேசன்)

அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.
இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை.

(“மே 18 (பகுதி 5)” தொடர்ந்து வாசிக்க…)

“ஈபிஆர்எல்எப்” அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டால் இன்று மாகாணசபை முறைமை இருந்திராது

(தினகரன் வார மஞ்சரி)

உங்கள் கட்டுரைகள் அடங்கிய ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றீர்கள். அவ்வாறு தலைப்பிட்டமைக்கான காரணம் என்ன?

கடந்த 30 – –40 வருடங்களில் அதிகாரம்,- அரசியல்- சமூகம், பாரதூரமான அளவில் வன்முறை மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை சகஜமானது, இயல்பானது, என்ற சொரணையற்ற தன்மை பரவலான நிலைமை. இவை சாதாரணம் என்பது போல. தமிழர் சமூகத்தில் இந்த வன்முறை காட்டுமிராண்டி நிலையை எய்தியது. எனவே இங்கு சமூகத்தில் ஜனநாயக மனித உரிமை விழுமியங்கள் தூக்கிநிறுத்தப்பட வேண்டியிருக்கிறது.

(““ஈபிஆர்எல்எப்” அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டால் இன்று மாகாணசபை முறைமை இருந்திராது” தொடர்ந்து வாசிக்க…)

சட்டப்பேரவை வைரவிழா அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார் ஸ்டாலின்

சட்டப்பேரவை வைரவிழாவுக்கான அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழனை மாலை வழங்கினர். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கருணாநிதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(“சட்டப்பேரவை வைரவிழா அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார் ஸ்டாலின்” தொடர்ந்து வாசிக்க…)

தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!

தோப்பூர் சம்பவம் மற்றும் வென்னப்புவ வியாபார நிலையத் தீ பற்றி அமைச்சர் ரிசாத்

(எஸ். ஹமீத்)

”இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் வாழ்விட உரிமைகள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தேவையேற்படும் பட்சத்தில் முப்படையினரும் இருக்கின்றனர். எனவே, தனி நபர்களோ அல்லது குழுக்களோ சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு செயற்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.”

(“தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்

ரோகிஞ்சா முஸ்லிம்கள் மீது, மியான்மார் இராணுவத்தினால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மார் இராணுவம், இன்று (23) நிராகரித்துள்ளது.

(“ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்

தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து எந்தவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் தெரிவிக்குமாறு, சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் இருவரை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்வாண்டு மார்ச்சில் கோரியதாக, முன்னாள், இந்நாள் அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வொஷிங்டன் போஸ்ட், நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.

(“பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 4)

(அருண் நடேசன்)

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள்.

(“மே 18 (பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத்தையும்தாண்டி மலையக மக்களின் அவலம்

மலையக பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் அநேகம்பேர் கொழும்பில் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள், அதில் அதிகமானவர்கள், சிற்றுண்டி சாலைகளிலும், வியாபார நிலையங்களில் சிப்பந்திகளாகவும், யுவதிகளை பொறுத்தவரை “காமெண்டுகளிலும் கடமையாற்றுகிறார்கள், ஒரு தொழிலாளிக்கு உரிமையுள்ள எட்டு மணி நேர வேலை என்பது இவர்களுக்கு எப்போதும் பகல் கனவுதான், அடிப்படை சம்பளமும் அற்ற ஒரு நிலைதான், கொழும்பு நகரில் பெரும்பாலான வியாபார ஸ்தாபனங்களில் இவர்கள் இல்லாவிட்டால் அதோ கதிதான் காரணம் இவர்களின் உழைப்பு, முதலாளி விசுவாசம், நேர்மை, கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொள்வது.

(“மலையகத்தையும்தாண்டி மலையக மக்களின் அவலம்” தொடர்ந்து வாசிக்க…)