பற்குணம் A.F.C (பகுதி 101 )

பற்குணத்தின் மகள் அபிராமியை மன்னார் முன்னாள் அரச அதிபர் வாமதேவன் சுண்டுக்குளி மகளிர் க்ல்லூரியில் சேர்ப்பதற்கு உதவினார்.எனக்கு வேலை இல்லை என்பதால் நான் அவளை பள்ளிக்கு கொண்டு செல்லும்வேலையை பொறுப்பெடுத்தேன்.

(“பற்குணம் A.F.C (பகுதி 101 )” தொடர்ந்து வாசிக்க…)

தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.

(சாகரன்)
 
1981 மே 31 யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்த சுதந்தர மாணவர் அமைப்பு (இதில் அனேகர் சிங்கள் மாணவர்கள் அங்கம் வகித்தனர்) யாழ் இற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். தமக்கான உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட சுதந்திரமான விஜயம் இது. இந்த விஜயத்தின் நோக்கம்; யாழ்ப்பாணத்தில் நூலக எரிப்பு யாழ் சந்தை எரிப்பு சுன்னாகம் சந்தை எரிப்பு போன்ற விடயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து புகைப்படங்களின் உதவியுடன் இதனை கொழும்பு பல்கலைக் கழத்திலும் அதனூடு எனைய சிங்கள் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசின் செயற்பாட்டினை அம்பலப்படுத்துவதாகும்.

(“தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் மீது கொலை முயற்சி…? என்னதான் நடக்குது

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் உறப்பினர்கள் சிலர் முயற்சி. கொலை முயற்சி முறியடிப்பு. சூத்திரதாரிகள் கைது. விசாரணைகள் தொடர்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் புலிகள் தூண்டுதல்” என்றவாறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டிய கைதுகள், விசாரணைகள், நீதி மன்ற நடவடிக்கைகள், சிறைவைப்பு என தொடர் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

(“சுமந்திரன் மீது கொலை முயற்சி…? என்னதான் நடக்குது” தொடர்ந்து வாசிக்க…)

“உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொறுமையை இழந்த மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, “இன்று (07-02-2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(““உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”” தொடர்ந்து வாசிக்க…)

கண்டன அறிக்கை

ஆணாதிக்க சமுதாயமானது பொதுவெளியை ஆண்களுக்கென்றே ஒதுக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு என்று இந்த பால்வாத சமுதாயம் விட்டுவைத்திருப்பது வீடும் அது சார்ந்த வெளிகளும் மட்டுமே. ஆனாலும் ஆளுமைமிக்க பெண்கள் தொடர்ச்சியாக இந்த பொது – தனிப்பட்டது என்ற பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளார்கள். இப்படியாக போராடும் பெண்கள் மீது பால்வாதம் தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது பால்வாதம் எப்போதும் பெண் உடல், அதன் செயற்பாடுகள், பெண்களது நடத்தைகள் என்பவற்றின் மீதே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த வகையில் பெண்களை தொடர்ந்தும் வீட்டினுள் முடக்கி வைப்பதற்கு பால்வாதம் பாவிக்கும் ஆயுதமாகவே பாலியல்ரீதியான தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். (“கண்டன அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து?

ஆளுநர் மும்பைக்கு சென்றதால் சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப் பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்தார். இந்த ராஜினாமா வும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. தற்போது அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரையில், தமிழக முதல்வராக பன்னீர்செல்வமே தொடர்கிறார்.

(“சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து?” தொடர்ந்து வாசிக்க…)

கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 9 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை வலம் வந்து அஞ்சலி செலுத்தியவர் 40 நிமிடங்கள் அங்கேயே தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலிக்கிறோம்….: தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா

இருபதாம் நூற்றாண்டின் பெரிய தமிழ் ஆளுமைகளில் ஒருவரான தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்கள். இன்று காலை 6.02.2017 ஆறுமணியளவில் காலமானார். தமிழுக்கு அணி செய்த அறிஞர் அவர்கள் 70 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர். மதரீதியாக இசுலாமியப் பெருந்தகையாக இருந்தும் தம் மக்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியவர், கலைக்களஞ்சியப் படைப்பாளர், எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை தமிழுக்குத் தந்தவர்.ஐ.நா.வின் கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக உலகத்துத் தொன்மைக் கலைகள் யாவையும் தமிழுக்குக் கொண்டுவந்தவர். போற்றப்பட வேண்டிய அரிய மனிதர். ஆழ்ந்த இரங்கல்கள்.

(“அஞ்சலிக்கிறோம்….: தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா” தொடர்ந்து வாசிக்க…)

ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு

(சேகர் குப்தா)
சுவரில் எழுதிய சித்திரம் போல’ என் றொரு சொலவடை உண்டு. கிராமங் கள், நகரங்கள் வழியாக நீங்கள் பயணம் செல்லும்போது நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை நேரிலேயே உணர முடியும். அதைத்தான் ‘சுவரில் எழுதிய சித்திரம்’ என்பார்கள். இந்தியாவில் அதிலும், இந்திய அரசியலில் மாற்றங்களுக்கு என்றுமே குறைவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் இதயம், சுவர்களில்தான் என்றாலும் மிகையில்லை.

(“ஆஆக எழுச்சி: பஞ்சாபில் தெரியும் தெளிவு” தொடர்ந்து வாசிக்க…)

நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை

சில மரணங்கள் கொடுமைகள் பொருளாதாரம் சாதி அழகு அந்தஸ்து போன்றவற்றினால் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்களினால் மறக்கப்பட்டு விடும் என்னவோ. நீதி என்பது வக்கிரமானவர்களின் கைகளில் வசமாக மாட்டிக்கொண்டு தவிப்பது மேலும் மேலும் இப்படியான நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

(“நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை” தொடர்ந்து வாசிக்க…)